உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் கார் விபத்து இந்திய பெண்கள் மூவர் பலி

அமெரிக்காவில் கார் விபத்து இந்திய பெண்கள் மூவர் பலி

வாஷிங்டன்: அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் நடந்த கார் விபத்தில், குஜராத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணம், க்ரீன்வில்லே மாவட்டத்தில் நேற்று கார் ஒன்று மரத்தில் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதாபென் படேல் மற்றும் மனிஷாபென் படேல் ஆகிய மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். க்ரீன்வில்லே பகுதியில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக நான்கு பேரும் காரில் சென்று கொண்டிருந்தனர். கார், வேக கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமல் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், நெடுஞ்சாலையின் எதிர்புறம் பாய்ந்து, 20 அடி உயரத்துக்கு துாக்கி வீசப்பட்டு, மரத்தில் மோதி உருக்குலைந்தது. இந்த கோர விபத்தில் மூன்று பெண்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து அமெரிக்க போலீசார் கூறுகையில், 'நெடுஞ்சாலையில் ஆறு வழிகளை தாண்டி, 20 அடி உயரத்துக்கு பறந்து மரத்தில் மோதுவது மிகவும் அரிதான செயல். அதிவேகமாக சென்றால் மட்டுமே இது போன்ற விபத்து நிகழும். இதனால் மற்ற வாகனங்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஏப் 28, 2024 11:38

அவர்கள் அனைவரும் அநேகமாக மது போதையில் காரை ஓட்டி சென்றிருக்கவேண்டும் இந்தியாவில்தான் அப்படி செய்வார்கள் அங்கேயுமா?? Speed Thrills, But Kills கேள்விப்பட்டதில்லை போலும்


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை