உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : தூதர் தகவல்

இந்தியா வருகிறார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி : தூதர் தகவல்

கீவ்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, இந்தியா வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த மாதம் ரஷ்யா -உக்ரைன் நாடுகளுக்குபிரதமர் மோடி அரசு முறைப்பயணம் மேற்கொண்டார். உக்ரைன் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். போர் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை; வெறும் பார்வையாளராக ஒதுங்கிக் கொள்ளவும் இல்லை. அமைதியின் பக்கமே இந்தியா உள்ளது' என, சுட்டிக்காட்டினார்.உக்ரைன் போரை முடிவுக்கு கெண்டு வருவதற்கான முயற்சியை பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள நிலையில் இந்தியாவிற்கான உக்ரைன் தூதரக அதிகாரி ஒலிக்ஸாண்டர் பொலிஷ்செவுக் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த ஆக. 23-ம் தேதி இந்திய பிரதமர் மோடி உக்ரைன் வருகை தந்தார். அப்போது பரஸ்பரம் நட்புறவு மேம்பட இந்தியா வருமாறு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு அழைப்பு விடுத்தார். அதனை அதிபர் ஏற்றுக்கொண்டார். இந்தாண்டு இறுதியில் அரசு முறைப்பயணமாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இந்தியா வர வாய்ப்புள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Easwar Kamal
செப் 09, 2024 23:25

ஐயோ பவன் ஜெலின்ஸ்கி இந்தியாவுக்கு வரதுக்கு பதிலா வேற நாட்டுக்கு போகலாம். இந்தியாவிலேயே கேவலமா பண்ணிக்கிட்டு இருக்கானுவ. ஒரு கண்ணுல வெண்ணை மற்றொரு கண்ணுல sunabunu மாநிலத்துக்கு மாநிலம் தங்கள் பங்களிப்பை கொடுத்துக்கிட்டு இருக்கானுவ. தமிழ்நாட்டுல மீனவர்கள் படுகின்ற அல்லல்கள் இணைக்கு வரைக்கும் நீர்களை. தேர்தல் வந்த போதும் பாசம் பொங்கும். கர்நாடக தமிழாடு தண்ணீர் பங்கீடு இன்று வரை முடிவு இல்லை. இந்தியாவிலே இன்னும் பல ப்ரிச்சனை ஓடிக்கிட்டு இருக்கு இதுல உங்க போர் எல்லாம் தீர்க்க படுமா? வேணும்னா பிசினஸ் டீல் பண்ணிட்டு போகலாம் அதுல நம்ம ஆளு கில்லாடி.


Kumar Kumzi
செப் 10, 2024 00:09

கள்ளக்குறிச்சி சரக்கு குடி உன் குடும்பத்துக்கு பத்து லட்சம் ஓவா கெடைக்கும்


Hari
செப் 10, 2024 08:04

A great fool from newyork talking about India.... 200 dollars in your account


ராமகிருஷ்ணன்
செப் 10, 2024 12:06

நியூயார்கில் கூட 200 ரூபாய் ஊபிஸ் இருக்காங்க, வெளங்கிடும்


v j antony
செப் 09, 2024 21:32

இரு நாடுகளுக்கான பிரச்சனையாக கருதாமல் அனைத்து மனிதர்களும் இந்த பூமியில் சண்டையிடாமல் வாழ உறுதியேற்கவேண்டும் நாடு பிடிக்கும் மன்னர்கள் காலத்தில் நாம் வாழ வில்லை இங்கு மக்களிடம் ஒற்றுமை உள்ளது அனைவரும் அனைத்து நாடுகளுக்கும் பணிக்காகவும் தொழில் மேற்கொள்ளவும் கல்விக்காகவும் செல்கின்றனர் ஆனால் நாட்டை நிர்ணயிக்கும் தலைவர்களே எப்போதும் மோதிக்கொள்கின்றனர்


ராஜ்
செப் 09, 2024 20:51

போன மாசம் பேசுனதுல ஏதாவது உட்டுப் போச்சா? எதுக்கு வீண் செலவு? போன்ல பேச முடியாதாக்கும்?


செல்வேந்திரன்,அரியலூர்
செப் 09, 2024 22:34

எப்படியான பிரச்சனைக்கு இப்படி கருத்தா


RAMAKRISHNAN NATESAN
செப் 10, 2024 05:20

உலகளவில் போன்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாகத் தகவல் பல ஆண்டுகளாக வெளிவருகிறதே ..... ஹாட்லைனும் அதற்கு விதிவிலக்காக இருக்காதோ ..... நேரில் சந்திப்பது உலகிற்கு ஒரு மெஸேஜ் கொடுத்தது போலவும் இருக்கும் .....


Ramesh Sargam
செப் 09, 2024 20:32

நல்ல செய்தி. அஜித் தோவல் ரஷியன் அதிபரை சந்திக்கிறார். ஜெலன்ஸ்கி இந்தியா வருகிறார். எப்படியோ உக்ரைன் ரஷ்யா போர் முடிவுக்கு வந்து அந்நாட்டு மக்கள் நிம்மதியாக இருந்தால் சந்தோஷம். மோடிஜி வாழ்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை