உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பதிலுக்கு பதில் வரி விதிப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடாப்பிடி

பதிலுக்கு பதில் வரி விதிப்பதில் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடாப்பிடி

வாஷிங்டன்: “அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிக்கு நிகராக, பதில் வரி விதிப்பதில் இருந்து பின்வாங்க மாட்டேன்,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். கடந்த 2021 - 24 வரை, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடு அமெரிக்கா. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதத்தில், இருதரப்பு வர்த்தகத்தின் மதிப்பு 7.18 லட்சம் கோடி ரூபாய். இதில் அமெரிக்காவுக்கு இந்திய ஏற்றுமதி 4.60 லட்சம் கோடி ரூபாய், இறக்குமதி 2.58 லட்சம் கோடி. அதாவது, இறக்குமதி செய்ததைவிட, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்தது கிட்டத்தட்ட இருமடங்கு. வர்த்தகப் பற்றாக்குறை, கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய். இது இந்தியாவுக்கு சாதகம்.

சரிசெய்ய முடிவு

இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 18 சதவீதம். மொத்த இறக்குமதியில் பங்கு 6.22 சதவீதம். இதுபோல, சீனா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமெரிக்க இறக்குமதி அதிகமாகவும்; அந்நாடுகளின் அதிக வரி விதிப்பால் ஏற்றுமதி குறைவாகவும் இருப்பதை சரிசெய்ய முடிவெடுத்தார் டிரம்ப். ஆட்சிக்கு வந்ததும் மெக்சிகோ, கனடா நாடுகளில் இருந்து எல்லா பொருட்களின் இறக்குமதி மீதும் 25 சதவீத வரி விதித்தார். பின்னர், அதை மார்ச் 1ம் தேதி வரை நிறுத்தி வைத்தார். சீனப் பொருட்களுக்கு ஏற்கனவே உள்ள வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரி விதித்துள்ளார்.இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதித்துள்ளார் டிரம்ப். இது மார்ச் 12 முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால், இந்திய உருக்கு தயாரிப்பாளர்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல சவால்களை சந்திக்க நேரிடும் என்கிறது, மூடிஸ் தர ஆய்வு நிறுவனம்.

பதிலுக்கு பதில்

கடந்த 2018ல், இந்திய உருக்கு மற்றும் அலுமினிய பொருட்களுக்கு அமெரிக்கா, இறக்குமதி வரியை அதிகரித்தது. பதிலடியாக, 29 அமெரிக்கபொருட்களுக்கு இந்தியா இறக்குமதி வரியை அதிகரித்தது. உள்நாட்டில் பொருட்கள் விலை உயரும் என்றபோதிலும், வர்த்தக பற்றாக்குறையை சமாளிக்க, நாடுகள் இதை செய்கின்றன. இதனால், இறக்குமதி குறைந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் வழி ஏற்படுகிறது.

பிடிவாதம்

இறக்குமதி வரியை அதிகரிப்பதில் டிரம்ப் உறுதியாக இருக்க காரணம், சீனா, இந்தியா போன்ற உற்பத்தி நாடுகளில் இருந்து அதிக இறக்குமதி நடைபெறுவதால், இருதரப்பு வர்த்தகத்தில் சமனில்லாத சூழல் ஏற்படுகிறது. இதனால், அமெரிக்க உற்பத்தி பாதித்து, உள்நாட்டு வேலைவாய்ப்பும் குறைவதால், இறக்குமதியை குறைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

நியாயமற்ற விமர்சனம்

இந்தியாவை வரிவிதிப்பு மன்னன் என்றும், வரிவிதிப்பு ஏய்ப்பாளர் என்றும் டிரம்ப் விமர்சித்தார். ஆனால், இந்தியாவுக்கு நிகராக அல்லது அதைவிட அதிகமாக, அமெரிக்க அரசும் இறக்குமதி வரி விதிப்பதாகவும்; இந்தியா மீதான அவரது விமர்சனம் நியாயமற்றது எனவும், பொருளாதார நிபுணத்துவ அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்துள்ளது. நாடுகள் இடையே வரி விதிப்பில், உலக வர்த்தக அமைப்பு நிர்ணயித்துள்ள விதிகளை இந்தியா முறையாக பின்பற்றுவதாகவும் அது தெரிவித்துள்ளது.

887 சதவீத வரி!

அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகள், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு அதிகபட்சமாக 887, 457, 350 சதவீத வரி விதிப்பதாக, ஜி.டி.ஆர்.ஐ., நிறுவனர் அஜய் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பின் விதிப்படி, அதன் உறுப்பு நாடுகள், தங்கள் பொருட்கள் மீதான வரி விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதைத் தாண்டி வரி விதிக்கப்பட்டால், அது விதிமீறலாக கருதப்படும்.

அமெரிக்கா விதிக்கும் வரி

பால் பொருட்கள் 188%தயார் உணவுகள் 193%எண்ணெய், கொழுப்பு பொருட்கள் 164%புகையிலை பொருட்கள் 150%பழங்கள், காய்கறிகள் 132%மீன் உணவுகள் 56%காபி, டீ, கோகோ, மசாலா 53%ரசாயனம் 35%ஆதாரம்: ஜி.டி.ஆர்.ஐ.,யின் 2023 தரவுகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
பிப் 15, 2025 12:01

மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புவது யாரை பாதிக்கும் டிரம்பு ?


Haja Kuthubdeen
பிப் 15, 2025 16:17

உங்க நண்பரை நீங்களே கிண்டல் செய்வது நியாயம் இல்லை.


Kasimani Baskaran
பிப் 15, 2025 07:23

வரி விதிப்பு என்பது இருமுனை கொண்ட வாள். ஊள்ளூர் தொழில்களையும் போட்டித்தன்மை மிகுந்ததாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.


spr
பிப் 15, 2025 06:17

"நாடுகள் இடையே வரி விதிப்பில், உலக வர்த்தக அமைப்பு நிர்ணயித்துள்ள விதிகளை இந்தியா முறையாக பின்பற்றுவதாகவும் அது தெரிவித்துள்ளது." அரசு வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வந்தாலும் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருளுக்கு ஏற்ற பொருட்கள் இருந்தாலோ அல்லது அத்தியாவசியத் தேவை இல்லை என்று இந்திய மக்கள் முடிவெடுத்துத் தேவையின்றி அந்நிய சரக்குகளை வாங்காமலிருந்தால், வரி விதிப்பு ஏட்டளவில் மட்டுமே இருக்கும் நாட்டுக்கு பிரச்சினை தீர்ந்தது. ஆனால் முறைகேடாக வெளிநாடு சென்றவர்களை ஏற்றுக் கொண்டதாவது நம் மரியாதையைக் காத்துக் கொள்ளும் முயற்சி என்று ஒப்புக் கொள்ளலாம் ஆனால் நம் நாட்டிலிருக்கும் சட்ட ஓட்டைகளை அறிந்தும் தேவையற்று சிறைசாலையில் இருக்கும் ஒரு தீவிரவாதியை திருப்பிக் கொணர்வது முறையல்ல. அவர் இங்கு வந்த பின் நம் சட்ட வல்லுநர்கள், நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் உதவியுடன் நாட்டை விட்டே தப்பி ஓடிவிடுவார் இத்தனை நாள் அவரைப் பிடிக்க பட்ட கஷ்டம் வீண் ஏற்கனவே நித்தியானந்தா நிராவ் மோடி எனப் பல குற்றவாளிகள் தப்பியிருக்கின்றனர்


Kasimani Baskaran
பிப் 15, 2025 07:20

நித்தி குற்றவாளியா? ஏதாவது தீர்ப்பு இருக்கிறதா. தெரிந்தால் சொல்லவும்.


MUTHU
பிப் 15, 2025 08:59

நம்ம காவல் துறையினர் சாதாரண அடிதடி பிரச்சினைக்கு பாத்ரூமில் வழுக்கி விழ வைத்து விடுவார்கள். இவனை தூக்கி கொஞ்சுவார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை