வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கனடாவில் இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்புங்கள்.
டொரான்டோ: ஊதிய உயர்வு உட்பட பல்வேறு சலுகைகளை வழங்கக் கோரி, 'ஏர் - கனடா' விமான நிறுவன ஊழியர்கள் 10,000 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், 700 விமானங்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. வட அமெரிக்கா நாடான கனடாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் ஏர் - கனடா. உலகம் முழுதும், 180 நாடுகளுக்கு விமான சேவை வழங்குகிறது. ஏர் - கனடா நிறுவனம் சார்பில், தினமும், 700 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஊதிய உயர்வு, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை உயர்த்தி வழங்குமாறு முக்கிய தொழிற்சங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது. விமான நிறுவனத்துடன் நடத்திய பல கட்ட பேச்சில் உடன்பாடு எட்டவில்லை. இதனால் நேற்று முதல் வேலை நிறுத்தம் துவங்கியது. பைலட்டுகள், விமான பணிப்பெண்கள், விமான நிலைய ஊழியர்கள் என 10,000 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால் ஏர் கனடா நிறுவனம் தன் சேவையை முற்றிலுமாக நிறுத்தியது. இதனால், ஒன்றரை லட்சம் பயணியர் பாதிக்கப்பட்டனர். மேலும் கனடாவைச் சேர்ந்த 25,000 பேர் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்க நேரிடும். பாதிக்கப்பட்ட பயணியர், விமான நிறுவனத்தின் வலைதளம் அல்லது மொபைல் செயலியில் முழு பணத்தை திரும்பப் பெறலாம் என ஏர் - கனடா தெரிவித்துள்ளது. அதேபோன்று பயண டிக்கெட்டை உறுதி செய்யாமல் யாரும் விமான நிலையங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
கனடாவில் இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்புங்கள்.