உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து மீட்பு

110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

யெரெவான்: இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரமடைந்ததை அடுத்து, அங்கு சிக்கி தவித்த, 110 இந்திய மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். ஹமாஸ் பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே ஆறு நாட்களாக தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. அடுத்தடுத்து சீறிப் பாயும் ஏவுகணைகளால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழலில், ஈரானில் தங்கி பயிலும் இந்திய மாணவர்களை மீட்க, 'ஆப்பரேஷன் சிந்து' நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதற்கான பணிகளை ஈரான் மற்றும் அர்மேனியா நாட்டில் உள்ள இந்திய துாதரகங்கள் மேற்கொண்டுள்ளன. முதற்கட்டமாக, ஈரானில் இருந்து, 110 இந்திய மாணவர்கள், பஸ்கள் வாயிலாக அண்டை நாடான அர்மேனியாவின் தலைநகரம் யெரெவானுக்கு அழைத்து வரப்பட்டனர். பின், அங்கிருந்து சிறப்பு விமானம் வாயிலாக நேற்று இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அந்த விமானம் இன்று காலை டில்லி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவர்கள் மீட்பிற்கு உதவிய ஈரான் மற்றும் அர்மேனியா நாடுகளுக்கு இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஈரானில் உள்ள இந்தியர்கள் வெளியே வர வேண்டாம் என்றும், பாதுகாப்பாக இருக்கும்படியும் அங்கிருக்கும் நம் துாதரகம் அறிவுறுத்தி உள்ளது.

*'ஆப்பரேஷன் சிந்து'


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 11:31

மீட்டது எங்கள் விடியல்தானே ?? என்னது இல்லையா ?? ஆரிய மோடி அரசா ??


arunachalam
ஜூன் 19, 2025 11:04

மோடி பிரதமரா இருப்பதால் தான் இதெல்லாம் சாத்தியமாகிறது


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 19, 2025 07:47

தமிழக முதல்வர் ஓரணியில் தமிழகம் நடவடிக்கையால் .. ஈரான் ..கழக தொண்டர்களுக்கு மரியாதை கொடுத்து பத்திரமாக மாணவர்களை இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது ,,,


Thravisham
ஜூன் 19, 2025 07:22

"எட்றா பஸ்ஸ விடுறா ஏர்போர்ட்டுக்கு, கூப்டுட்டு வா என்கிட்ட, மோடியவிட டாடி தான் பெருசு".


சண்முகம்
ஜூன் 19, 2025 05:49

இவர்கள் இந்தியாவில் இல்லாத என்ன படிப்பை இரானில் படிக்கிறார்கள்?


சிட்டுக்குருவி
ஜூன் 19, 2025 05:26

மத்திய அரசு ஒரு ஆய்வுக்கு ஏற்பாடு செய்யவேண்டும் .எதற்க்காக இந்திய மாணவர்கள் உலகில் உள்ள பல நாட்டிற்கும் சென்று கல்வி பயில்கின்றார்கள்.கல்வி தரம் இந்தியாவை விட மேலாக இருக்கின்றதா .அல்லது அவர்கள் பயிலவிரும்பும் பாட பிரிவுகள் இந்தியாவில் இல்லையா ? அல்லது இந்திய பல்கலைகளில் அவர்களுக்கு அட்மிஷன் கிடைக்கவில்லையா ?இந்தியாவில் படிப்பது அந்நிய நாடுகளில் படிப்பதைவிட அதிகமாக செலவாகின்றதா ? எந்த நாட்டிலும் தன் சொந்த நாட்டில் படிப்பதைவிட செலவு குறைவாக இருக்கபோவதில்லை . பெரும்பாலும் மாணவர்கள் அந்நிய நாடுகளில் மருத்துவம் படிப்பதாகத்தான் தோன்றுகின்றது .காரணம் இந்தியாவில் இடம்கிடைக்காமையே .அப்படி இருக்கும்போது ஏன் இந்தியாவிலேயே தனியார் பல்கலைகள் ,independent of university grant commission அரசு உதவியோ ,கட்டுப்பாடோ இல்லாமல் சுயமாக நடத்தும் உரிமையை அளிக்கக்கூடாது .அப்படி அளிக்கும் பட்சத்தில் மாணவர்களும் பெற்றோர்களும் எந்தவிதமான அச்சமும் இல்லாமல் கல்வியை தொடர்வார்கள் .பணமும் உள்நாட்டிலேயே இருக்கும் .அரசுக்கும் வருவாய் கூடும் .இதுபோன்ற அசம்பாவிதகாலங்களில் அரசுக்கும் நெருக்கடி இருக்காது .முடங்கிக்கிடக்கும் கருப்பு பணமும் வெளியில் வந்து பயனுள்ளதாகமாறும் .


Mani . V
ஜூன் 19, 2025 04:42

இதுக்கும் காரணம் "அப்பா" ஸ்டாலின்தான் என்று உருட்ட 200 ரூபாய் ஊபீஸ் வரிசையாக மேடைக்கு வரும்படி விழாக்குழு சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை