உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஜெர்மனியில் ரயில் நிலையத்தில் சம்பவம்; பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்திய பெண்

ஜெர்மனியில் ரயில் நிலையத்தில் சம்பவம்; பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்திய பெண்

ஹம்பர்க்; ஜெர்மனியில் ரயில் நிலையத்தில் பெண் ஒருவர் கத்தியால் குத்தியதில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. ஹம்பர்க் ரயில் நிலையத்தில் 13 மற்றும் 14வது நடைமேடையில் பயணிகள் எப்போதும் போல் ரயிலின் வருகைக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கே நின்றிருந்த பெண் ஒருவர் திடீரென தாம் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அருகில் உள்ளவர்களை சரமாரியாக குத்த ஆரம்பித்தார். இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத பலரும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்தனர். தாக்குதலில் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவத்தை அடுத்து அங்குள்ள போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். அவர் எதற்காக இதுபோன்ற தாக்குதலில் இறங்கினார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் கூறுகையில், தாக்குலில் ஈடுபட்டவர் 39 வயது பெண். அவர் எதற்காக இப்படி நடந்து கொண்டார் என்பது தெரியவில்லை. தாக்குதலுக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது பற்றிய விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு மனநிலை பாதிப்பு உள்ளதா என்பது குறித்து விசாரிக்க உள்ளோம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Siva Balan
மே 24, 2025 16:44

அங்கும் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறதோ.....


kalyan
மே 24, 2025 13:22

ஏற்கனவே இத்தகைய பயங்கரவாத செயல்களால் வலது சாரி கட்சி AFD நடந்து முடிந்த தேர்தலில் 22 சதவிகித வாக்குகளைப்பெயற்று எதிர்க்கட்சியாக வந்துள்ளது . இது தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் அவர்கள் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது பிறகென்ன வெளிநாட்டவர் அங்கு கல்வி பயிலவோ வேலை செய்யவோ தடை விதிக்கப்படலாம்


Rathna
மே 24, 2025 12:09

பாக்கிஸ்தான், பங்களாதேஷ், சிரியா, அரேபியா காட்டுமிராண்டிகளை ஐரோப்பா, வியாபாரத்திற்காக, குறைந்த கூலிக்காக உள்ளே அனுமதிக்கிறது. அதன் விளைவை அனுபவிக்கிறது. ஆனால் இவனுக இந்தியாவிற்கு நடத்தும் பாடத்தை கேட்டால் கேவலமாக இருக்கும்.


Iniyan
மே 24, 2025 10:57

சம்பவம் நடந்தது வெள்ளி கிழமை. சம்பவம் செய்தது மனநலம் பாதிக்க பட்ட மர்ம பெண். இது யார். கண்டிப்பக்க பயங்கரவாதத்திற்கு மதம் இல்லை என்று அமைதி ஆட்கள் விளக்கம் தருவார்கள்.


ram
மே 24, 2025 10:54

ஐரோப்பா நாடுகள் அகதிகளை விட்டதற்கு அமைதியான பரிசு, இது இன்னும் தொடரும். இவர்களுக்கு இஸ்ரேல் ஆட்கள் தான் கரெக்டானவர்கள்.


தத்வமசி
மே 24, 2025 10:38

அந்த பெண்ணை தவறாக பேசாதீர்கள். மனித உரிமை மீறலாகும். குத்தப்பட்டவர்கள் மனிதர்களாக தெரிய மாட்டார்கள். மன நோயால் பாதிக்கப்பட்டவர் என்று முத்திரை குத்தப்பட்டு ராஜ உபசாரம் வழங்கப்படும் என்று நம்பலாம்.


Sampath
மே 24, 2025 08:53

பெயர் மறைக்க பட்டால் அது யார் அமைதியாக யோசிக்கவும்


theruvasagan
மே 24, 2025 08:33

மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாமா. அங்கேயும் ஸ்காட்லாந்து போலீசு இருக்கிறதா.


VENKATASUBRAMANIAN
மே 24, 2025 08:12

இங்கே உள்ள கம்யூனிஸ்டுகள் என்ன சொல்ல போகிறார்கள். பகலகாமில் பாதுகாப்பு படை இல்லை விருந்திற்கு நேரமாகிவிட்டது என்று புலம்பிய வர்கள். போலிஸார் பக்கத்தில் இருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது. எதுவும் எப்போதும் நடக்கலாம். வாயில் வந்ததை பேசக்கூடாது. கோடிக்காக சரணடைந்தவர்கள் பேசவே கூடாது.


Kasimani Baskaran
மே 24, 2025 07:30

பெயரை போட்டு இருந்தால் யார் என்று புரிந்திருக்கும்..


SUBBU,MADURAI
மே 24, 2025 09:03

RSB ஊடகங்களின் கூற்றுப் படி கண்டிப்பாக அவர் ஒரு மர்மப் பெண்ணாகத்தான் இருக்கும்.


Keshavan.J
மே 24, 2025 10:36

போடாத பொது நீங்களா புரிந்து கொள்ள வேண்டும்.


sridhar
மே 24, 2025 12:02

இவ்வளவு தானா உங்கள் புரிதல் . பெயர் வேறு போடணுமா


புதிய வீடியோ