உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரானில் பஸ் கவிழ்ந்து விபத்து: பாகிஸ்தானை சேர்ந்த 35 பேர் பலி

ஈரானில் பஸ் கவிழ்ந்து விபத்து: பாகிஸ்தானை சேர்ந்த 35 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டெஹ்ரான்: ஈரானில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பாகிஸ்தான் யாத்ரீகர்கள் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் பலத்த காயம் அடைந்தனர்.பாகிஸ்தானில் இருந்து ஈராக்கிற்கு, 50க்கும் மேற்பட்ட யாத்ரீகர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். மத்திய ஈரானின் யாஸ்த் மாகாணத்தில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் விபத்துக்குள்ளானது. இதில், 35 யாத்ரீகர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் பாகிஸ்தானின் சிந்து மாகாணம் லர்கானா நகரைச் சேர்ந்தவர்கள். 18 பேர் பலத்த காயமுற்றனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இரங்கல்

பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவு துறை அமைச்சருமான இஷாக் தார் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ''உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்த யாத்ரீகர்களுக்கு சிகிச்சை அளிக்க அனைத்து உதவிகளும் செய்யப்படும். டெஹ்ரானில் உள்ள நமது தூதருக்கு இறந்தவர்களின் உடலை, பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்ய நான் அறிவுறுத்தி உள்ளேன்'' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Guru
ஆக 21, 2024 17:14

ஆழ்த்த இரங்கல்கள்


Mali
ஆக 21, 2024 15:21

அப்பாவியாக இல்லாமல் இருந்தால் 35 குண்டு மிச்சம்.


P. VENKATESH RAJA
ஆக 21, 2024 13:42

பஸ் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும்


மேலும் செய்திகள்







புதிய வீடியோ