வாசகர்கள் கருத்துகள் ( 1 )
குழந்தையின் பிறந்தநாள் விழாவில்கூட துப்பாக்கி சூடா? ட்ரம்ப், என்னய்யா அதிபர் நீ?
கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ன் பிறந்த நாள் விழாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஸ்டாக்டனில் உள்ள ஒரு மண்டபத்தில் குழந்தை ஒன்றின் பிறந்த நாள் விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. அவ்விழாவில் சிறியவர்கள் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் பங்கேற்றனர். அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் நான்கு பேர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம், குறிப்பிட்ட சிலரை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கலாம் என, போலீசார் சந்தேகப்படுகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
குழந்தையின் பிறந்தநாள் விழாவில்கூட துப்பாக்கி சூடா? ட்ரம்ப், என்னய்யா அதிபர் நீ?