மேலும் செய்திகள்
கத்தார் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி: டிரம்ப் உறுதி
6 hour(s) ago | 1
தடுப்பு கன்டெய்னர்களை ஆற்றில் தள்ளிய போராட்டக்காரர்கள்
21 hour(s) ago
பீஜிங் : சீனாவில் புல்லட் ரயில் விபத்து நடந்து 21 மணி நேரம் கழித்து, 4 வயது சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது. சீனாவின் ஷீஜியாங் மாகாணத்தில், நேற்று முன்தினம், நின்று கொண்டிருந்த புல்லட் ரயில் மீது மணிக்கு 300 கி.மீ., வேகத்தில் வந்த மற்றொரு புல்லட் ரயில் மோதியதில், 45 பேர் பலியாயினர்.
ரயில் பெட்டிகளை நகர்த்தி, மீட்புப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, ஒரு பெட்டியில் சிறு குழந்தையின் கை ஒன்று அசைந்து கொண்டிருப்பதைப் பணியாளர்கள் பார்த்தனர். பரபரப்படைந்த பணியாளர்கள், உடனே பெட்டிக்குள் புகுந்து அந்தக் குழந்தையை வெளியே கொண்டு வந்தனர்.
தற்போது அக்குழந்தைக்கு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மிகக் கொடூரமான இவ்விபத்தில் ஒரு பெண் குழந்தை உயிர் பிழைத்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.
6 hour(s) ago | 1
21 hour(s) ago