உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் 54 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் 54 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெஷாவர் : பாகிஸ்தானின் வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.எல்லையில் உள்ள பிபாக் கர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் அத்துமீறி ஊடுருவினர். அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி, அவர்கள் துப்பாக்கியால் சுடத் துவங்கினர். இதையடுத்து, அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில், 54 பேர் பலியாகினர். இதைத்தொடர்ந்து, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இதற்கிடையே, இறந்த நபர்களை அடையாளம் காணும் பணியில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டனர். இதில், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆப்கானிஸ்தானில் இயங்கும் தெஹ்ரிக் - இ - தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ராமகிருஷ்ணன்
ஏப் 28, 2025 11:57

அப்படி தான் அப்படி தான் உன் நாட்டு தீவிரவாதிகளை நீயே சுட்டு போடு. இந்தியாவில் வந்து தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் கும்பல் முழுவதும் கொன்று விடுகிறாயா. பிணங்களை எல்லையில் கொண்டு வந்து காமித்து நம் ராணுவ வீரர்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேள், காஷ்மீர் மக்களிடம், மத்திய அரசிடம் மன்னிப்பு கேள்.


Nathan
ஏப் 28, 2025 09:00

அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல விடுதலை போராளிகள். சுட்டு கொன்ற பாகிஸ்தான் ராணுவமே உலகின் பெரிய தீவிரவாத குழு


Keshavan.J
ஏப் 28, 2025 06:44

In Pakistan all are terrorist. The news should be uniform terrorist killed ununiform terrorist.


Naga Subramanian
ஏப் 28, 2025 06:01

பஹல்காமில் ஊடுருவி, அப்பாவி இந்தியர்களை கொன்றவர்களை நம்மிடையே உள்ள சில துரோகிகள் போராளிகள் என்று கூறினார்கள். அப்படிப்பட்ட சனாதன ஒழிப்பாளர்கள், ஆப்கனிலிருந்து ஊடுருவியவர்களை எவ்வாறு அழைப்பார்களோ தெரியவில்லை.


Kasimani Baskaran
ஏப் 28, 2025 03:45

ஆப்கன் எல்லையில் இந்திய எல்லையை விட அதிக பதற்றம். ஈரான் தனது எல்லையை பலப்படுத்ததில் ஈரானுக்கும் ஓடிவிட முடியாது. தீவிரவாதிகளை உள்ளே விட்டு சீனா ஆதரவு கொடுக்குமா என்றால் அதுவும் நடக்காது. ஆக இந்தியா அடிக்கட்டும் என்று பலர் காத்திருக்கிறார்கள்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை