நேபாளம் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் பயணியரை ஏற்றிச் சென்ற ஜீப், 700 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் எட்டு பேர் உயிரிழந்தனர்; 10 பேர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான நேபாளத்தில், கலங்காவிலிருந்து சியாலிகாடிக்கு, 18 பயணியருடன், ஜீப் ஒன்று பயணம் செய்தது. ருகும் மாவட்டத்தின் பாபிகோட் அருகே சென்ற போது ஜீப் எதிர்பாராதவிதமாக பாதையில் இருந்து விலகி, 700 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஒருவர், மருத்துவமனையில் சிகிச்சையின் போது உயிரிழந்தார். காயமடைந்த மேலும் 10 பேர் ருகும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.