உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் ரூ.8300 கோடி மோசடி; இந்திய தொழிலதிபருக்கு சிறை தண்டனை

அமெரிக்காவில் ரூ.8300 கோடி மோசடி; இந்திய தொழிலதிபருக்கு சிறை தண்டனை

சிகாகோ: அமெரிக்காவில் போலி ஆவணங்களை அளித்து, முதலீட்டாளர்களை ஏமாற்றி, 8,300 கோடி ரூபாய் மோசடி செய்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் ரிஷி ஷாவுக்கு, 38, ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சிகாகோவில் வசிப்பவர் ரிஷி ஷா. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவர், 2006ம் ஆண்டு 'அவுட்கம் ஹெல்த்' என்ற நிறுவனத்தை துவக்கினார். இந்நிறுவனம் புதுமையான முறையில் விளம்பரம் செய்வதன் வாயிலாக நோயாளிகள் மற்றும் மருந்து நிறுவனங்களுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்தி மருந்து நிறுவனங்களின் வருவாயை அதிகரிக்க முடியும் என்று கூறியது.இதற்காக 'அவுட்கம் ஹெல்த்' நிறுவனம், மருத்துவமனைகள் மற்றும் டாக்டர்களின் அறையில் மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரங்களாக ஒளிபரப்பி வந்தது.இதையடுத்து பிரபலமான பல மருத்துவ நிறுவனங்கள் விளம்பரங்களுக்கு பணம் தந்தனர். நிறுவனத்தின் வளர்ச்சியை கண்டு முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் அவுட்கம் ஹெல்த்தில் முதலீடு செய்தன.இந்நிலையில், கடந்த 2017ல் அவுட்கம் ஹெல்த் நிறுவனம் போலி ஆவணங்களை தயாரித்து, 8,300 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டாளர்களின் பணத்தை மோசடி செய்துள்ளதை 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தித்தாள் அம்பலப்படுத்தியது. இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களான கோல்டுமேன் சாக்ஸ், கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளிட்டவையும் பணத்தை இழந்துள்ளன. இதையடுத்து, அந்நிறுவனத்தின் நிறுவனர் ரிஷி ஷா, இணை நிறுவனர்களான பிராட் பர்டி, ஷர்த்தா அகர்வால் ஆகியோர் மீது அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கின் சாட்சியங்களை விசாரித்த அந்நாட்டு நீதிமன்றம், அவர்களின் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது.இதையடுத்து, ரிஷி ஷாவுக்கு ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதேபோல், இணை நிறுவனர்களான பிராட் பர்டிக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்களும், ஷர்த்தா அகர்வாலுக்கு மூன்று ஆண்டுகளும் சிறை தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

BABU
ஜூலை 03, 2024 17:05

திராவிடன் என்ற சொல்லில் தமிழனும் சேர்ந்தே வருகிறான். பின் தமிழன் என்று பிரித்து கேட்பதன் காரணம் என்ன?


Narasimhan
ஜூலை 03, 2024 12:35

இது போன்ற ஆட்கள்தான் இப்போது இந்திய பங்கு சந்தைகளில் பூந்து விளையாடுகிறார்கள். மக்களே ஜாக்கிரதை


அப்புசாமி
ஜூலை 03, 2024 11:42

ஒண்ணு திருட்டு திராவிடன் இல்லேன்னா திருட்டு குஜராத்தி.


karthik
ஜூலை 03, 2024 13:50

ஏன் தமிழன் திருடுறதே இல்லையா?


Kamaraj TA
ஜூலை 03, 2024 11:08

அது நரசிம்மராவ் இல்லையா? மன்மோகன் சிங் என்று குறிப்பிட்டு உள்ளீர்கள்


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 15:42

மன்மோகன் பொறுப்பு . ஹர்ஷத் மேத்தா ஆட்டைய போட்டு கொண்டிருக்கும் போது பங்குச் சந்தை பயங்கரமாக ஏறியதைக்கே‌ட்டு( அதனை விசாரிக்காமல்) இதற்கெல்லாம் நான் எனது உறக்கத்தை இழக்க மாட்டேன் என்று கூறிய நிதியமைச்சர். அதன் விளைவாக சேமிப்பை இழந்த பல நூறு பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் . சோனியா வாயே திறக்கவில்லை.


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 11:07

ஏழரை ஆண்டுகள் சிறை தண்டனை ?? ஒரு குஜராத்திக்கே ஏழரையா ????


Ramesh Sargam
ஜூலை 03, 2024 10:43

ஏன் இந்த பேராசை? இனி சிறைவாசம் முடிந்து வெளியில் வந்தாலும் யாரும் மதிக்கவோ, நம்பவோ மாட்டார்கள்.


Sampath Kumar
ஜூலை 03, 2024 10:00

மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்


வாய்மையே வெல்லும்
ஜூலை 03, 2024 09:19

திருடனுக்கு வெளிநாட்டு களி கன்பார்ம்


ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 09:12

முன்பு முதலீட்டாளர்களை ஏமாற்றி இதைவிட பல மடங்கு பிராடு செய்த வழக்கில் ராஜரத்தினம் என்ற தமிழர் கடுமையான தண்டனைக்குள்ளானார். ஆனா மன்மோகனுக்கே அல்வா கொடுத்த ஹர்ஷத் மேத்தாவை மிஞ்ச ஆளில்லை


மேலும் செய்திகள்









புதிய வீடியோ