உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்; ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!

இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம்; ஆசியான் மாநாட்டில் பிரதமர் மோடி உறுதி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

லாவோஸ்: இந்தியா - ஆசியான் அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ''இளைஞர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உண்டாக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது,'' என்றார்.வியட்நாமின் லாவோஸ் நகரில் நடக்கும் ஆசியான்- இந்தியா அமைப்பின் 21வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: ஆசியான் நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து நேரடி விமான சேவை உள்ளது. புருனேவிற்கும் விரைவில் துவங்க உள்ளது. கிழக்கு தைமூரில் இந்திய தூதரகம் திறக்கப்பட்டு உள்ளது. மக்களை மையமாக கொண்ட நடைமுறையே வளர்ச்சிக்கான அடிப்படை ஆகும். நாலந்தா பல்கலையின் 'ஸ்காலர்ஷிப்' திட்டம் மூலம் ஆசியான் நாடுகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலனடைந்து உளளனர். கோவிட் பெருந்தொற்று ஆகட்டும், இயற்கை பேரிடர் ஆகட்டும் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவி வருகிறோம். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு வழங்குவதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிதி, டிஜிட்டல் நிதி மற்றும் பசுமை நிதி ஆகியன ஏற்படுத்தப்பட்டு உள்ளன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=312frhdn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கு இந்தியா சார்பில் 3 கோடி அமெரிக்க டாலர் நிதி அளிக்கப்பட்டு உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் கிழக்கு நோக்கிய இந்தியாவின் கொள்கை காரணமாக இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கு இடையிலான உறவுக்கு புது ஆற்றல், திசை கிடைத்து உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆசியான் பிராந்தியத்துடன் ஆன இந்தியாவின் வர்த்தகம் 1300 கோடி டாலர் ஆக அதிகரித்து உள்ளது. அமைதியை விரும்பும் நாம் ஒருவருக்கு ஒருவர் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை மதித்து வருகிறோம். நமது இளைஞர்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்கி தரவேண்டிய கடமை நமக்கு உள்ளது. இந்தியா அதை கண்டிப்பாக செய்யும்.21ம் நூற்றாண்டானது இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளுக்கானது என்று நம்புகிறேன். இன்று உலகின் பல பகுதிகளில் மோதல் மற்றும் பதற்றமான சூழ்நிலை இருக்கும்போது, இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளின் நட்பு, ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Mani . V
அக் 11, 2024 05:40

ஒருவேளை ஐயா, நம்ம இளவரசர் உதயநிதியை குறிப்பிட்டுச் சொல்வாரோ?


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 10, 2024 20:28

பிரகாசமான எதிர்காலம் பக்கோடா கடையிலா .....தலைமுறை தலைமுறையா ஒரு குடும்பத்துக்கு வண்டி கழுவுறதைவிட பகோடா கடை அசிங்கமில்ல பாஸ் .....


Premanathan Sambandam
அக் 10, 2024 20:25

ஜோசியம் சொல்வது, வாயால் வடை சுடுவதை தவிர்த்தல் நாட்டுக்கும் கட்சிக்கும் நல்லது 10 வருடமாக கேட்டு கேட்டு அலுத்து விட்டது


Barakat Ali
அக் 10, 2024 19:27

தல மோடிக்கு தெரியல, இப்பவே எங்க டுமீல் நாட்டு இளைஞர்கள் பலர் டாக்டர் ஜாஃபர் சாதிக் ப்ரிஸ்கிரைப் பண்ணின மருந்தை சாப்புட்டு கண்ணை மூடினா பிரகாசமாகத்தான் இருக்காம் ....


Narayanan Muthu
அக் 10, 2024 19:20

பிரகாசமான எதிர்காலம் பக்கோடா கடையிலா


hari
அக் 11, 2024 14:52

இல்லை நாராயணா... எதிரில் இருக்கும் டாஸ்மாக் கடையில் உன் எதிர்காலம்.... கெளம்பு


Anu Sekhar
அக் 10, 2024 18:11

இங்கே உள்ள சுயநலவாதிகளுக்கு இதெல்லாம் புரியாது. வாழ்க பாரதம் நல்ல செயல்களை செய்ய முடியாவிட்டாலும் செய்பவரை ஊக்குவியுங்கள்.


அப்பாவி
அக் 10, 2024 18:04

இவரை விட மத்த ஆளுங்க இளைஞர்களாக இருக்காங்க. பிரகாசமா ஸ்விக்கி, சொமாட்டொவிலேதான் வேலை இருக்கு.


hari
அக் 11, 2024 14:51

அப்பாவிக்கு என்ன வேலைனு தெரிஞ்சுக்கலாமா..... இல்ல டாஸ்மாக் பாஞ்சு லட்சம்தான் தான். full டைம். வேலையா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை