உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் கொளுத்தும் வெயில்; உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை

அமெரிக்காவில் கொளுத்தும் வெயில்; உருகும் ஆபிரகாம் லிங்கன் மெழுகு சிலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் வாஷிங்டனில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அங்குள்ள துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி உள்ளது. அமெரிக்காவில் வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலையின் தாக்கத்தால் மெழுகால் செய்யப்பட்ட சிலைகளும் உருகி வருகிறது. அமெரிக்காவில் வாஷிங்டனில் 100 டிகிரி பாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி வருகிறது. அங்குள்ள துவக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் 6 அடி உயர மெழுகு சிலையின் தலைபகுதி உருகியது. சேதமடைந்த தலைப்பகுதி தற்போது சீரமைக்கப்பட்டு வருகிறது. 1860ம் ஆண்டு மேற்கு மாநிலங்களில் தலைவராக இருந்த இவர் குடியரசுக் கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமெரிக்காவின் அதிபராக வெற்றி பெற்றார். அவரை பெருமைப்படுத்தும் வகையில் வாஷிங்டனில் துவக்கப்பள்ளி வளாகத்தில் மெழுகு சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இது வெயிலில் உருகி உள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஜூன் 26, 2024 16:31

இதன் உண்மையான அர்த்தம் என்ன. 1 திறமையற்றவர்கள் மெழுகு சிற்பம் வடிப்பதில் 2 இவ்வளவு வெப்பம் இருக்கப்போகின்றது இந்த வெப்பத்தில் இந்த சிற்பத்தை காப்பது எப்படி என்று கூட அறியாதவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டுவார்கள்?????முஸ்லீம் நேரு காங்கிரஸ், திருட்டு திராவிடம் திருட்டு திரிணாமுல் காங்கிரஸ் ......... அறிவின் வழியில் அமெரிக்கா என்று அறிந்து கொள்ளவும்


vijay s
ஜூன் 26, 2024 17:46

????????????????????????????????????


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை