உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிகரிக்கும் கரடி தாக்குதல் களமிறங்கியது ராணுவம்

அதிகரிக்கும் கரடி தாக்குதல் களமிறங்கியது ராணுவம்

டோக்கியோ: ஜப்பானில் கரடிகளின் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உள்ளூர் மக்களை பாதுகாக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள் ளது. கிழக்கு ஆசிய நாடான ஜப்பானில் கரடிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாட்டில், 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரடிகள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. இந்தக் கரடிகள் இரவு நேரங்களில் உணவு தேடி பள்ளிகள், ரயில் நிலையங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ரிசார்ட்டுகள் அருகே சுற்றித் திரிகின்றன. மலையடிவாரத்தில் தனியாக இருக்கும் வீடுகளுக்குச் சென்று அங்கிருக்கும் பொருட்களை சூறையாடுகின்றன. கடந்த ஏழு மாதங்களில் மட்டும் நாடு முழுதும் கரடி தாக்கி, 12 பேர் உயிரிழந்துள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதையடுத்து ஜப்பான் ராணுவ அமைச்சகமும், அகிதா மாகாண அரசும் ஒப்பந்தம் செய்து கொண்டு, அங்கு ராணுவ வீரர்களை நிறுத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. கரடிகளை உயிருடன் பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை