உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் பாலம் இடிந்து விழுந்தது: 11 பேர் பலி: 30 பேர் மாயம்

சீனாவில் பாலம் இடிந்து விழுந்தது: 11 பேர் பலி: 30 பேர் மாயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்து, 11 பேர் உயிரிழந்தனர். 30 பேர் மாயமாகி உள்ளதால், தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது.வடமேற்கு சீனாவின் ஷான்ஸி மாகாணத்தில் கனமழை காரணமாக, ஏற்பட்ட வெள்ளத்தால், மேம்பாலத்தின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மேம்பாலம் சரிந்து விழுந்ததில் 11 பேர் பலியாகினர். 30 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். தேடுதல் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்களை மீட்புக் குழுவினர் மீட்டனர். மீட்புப் பணியில் 736 வீரர்களும், 76 வாகனங்களும், 18 படகுகளும், 32 டிரோன்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.'பாலம் இடிந்து விழுந்ததால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்' என சீன அதிபர் ஜி ஜின்பிங் எக்ஸ் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
ஜூலை 20, 2024 16:32

இயற்கையின் சீற்றத்தின் முன் மனிதன் எத்தனை முயன்றாலும் தப்பிக்க முடியாது போலும் ஆனால் இங்கேயோ, திறப்பு விழா கண்ட மறு வாரமே இடியும் அளவு கைவண்ணத்தைக் காண்கிறோம்


selvam
ஜூலை 20, 2024 14:45

மாயமானவர்களை மீட்க நடவடிக்கை தேவைப்படுகிறது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை