உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா: ஆட்சியை பிடித்தது ராணுவம்

டாக்கா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று தனது பதவியை ராஜினாமா செய்ததுடன் தலைநகரான டாக்காவை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து இங்கு ராணுவ ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் நடந்த வன்முறையில் பலர் பலியாயினர். பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தி வந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ggz78szw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வங்கதேசத்தில் 1971-ம் ஆண்டு போரில் பங்கேற்றவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த 2018-ல் அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதையடுத்து அரசு நிறுத்தி வைத்தது.கடந்த சில மாதங்களுக்கு முன் இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதை எதிர்த்து வங்கதேச மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். பேராட்டம் வன்முறையாக மாறியதில் இதுவரை 105 பேர் உயிரிழந்தனர்.

பள்ளி, கல்லூரிகள் மூடல்

அனைத்து பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழங்கள் மூடப்பட்டன. சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நடந்த வன்முறையில் பொது சொத்துக்கள் சேதமடைந்தன. பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக கோரி மாணவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இன்று ஷேக் ஹசீனா பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அவர், டாக்காவை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது. தனது சகோதரி ஷேக் ரிஹானாவுடன் சேர்ந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

முற்றுகை

பிரதமர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், வன்முறை வெடித்ததும், பிரதமர் இல்லத்தில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிவிட்டார். தற்போது அவர் எங்கு உள்ளார் எனத் தெரியவில்லை. டாக்காவில் நிலைமை பதற்றமாக உள்ளது. போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

சூறை

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் நுழைந்த வன்முறையாளர்கள், வீட்டை சூறையாடியதுடன், அங்கிருந்த பொருட்களை தூக்கி சென்றனர். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

சிலை உடைப்பு

ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் வெற்றி பேரணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்நாட்டின் தந்தையும், முன்னாள் அதிபருமான முஜிபுர் ரஹ்மானின் சிலைகளை போராட்டக்காரர்கள் உடைத்தனர். இவரின் மகள் தான் ஷேக் ஹசீனா என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் தீவிர கண்காணிப்பு

ஷேக் ஹசீனா பதவி விலகி உள்ள நிலையில், வங்க தேச எல்லையை ஒட்டிய பகுதிகளை இந்திய பாதுகாப்பு படையினர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

shreya
ஆக 06, 2024 00:00

இதே மாதிரி தமிழ் நாட்டையும் இலவசமா மக்களுக்கு நிறைய கொடுத்து திவாலாக்கி மக்கள் கிட்ட அடி வாங்க போறாங்க னு நினைக்கிறேன்.


shreya
ஆக 06, 2024 00:00

இதே மாதிரி தமிழ் நாட்டையும் இலவசமா மக்களுக்கு நிறைய கொடுத்து திவாலாக்கி மக்கள் கிட்ட அடி வாங்க போறாங்க னு நினைக்கிறேன்.


ES
ஆக 05, 2024 23:09

None of these people should enter our country. Our PM needs to make sure of this


Sivagiri
ஆக 05, 2024 22:49

இன்றைய சூழ்நிலையில் , அமேரிக்கா இங்லாண்ட் , ஐரோப்பா , மேற்கு ஆசியா , ஆப்ரிக்க , அரேபிய , கிழக்கு ஆசியா , என எல்லா பகுதி நாடுகளை காட்டிலும் , பாரத பிரதமர் மோடி மட்டுமே ஸ்ட்ராங் ஆக அரசாங்கத்தை நடத்துகிறார் ,


தாமரை மலர்கிறது
ஆக 05, 2024 22:22

நீதிபதிகள் மனசாட்சிக்கு எதிராக அரசுக்கு ஆதரவாக தீர்ப்பளித்தால், ப்ரோமோஷன் கிடைக்கும் என்ற நப்பாசையால் கொடுத்த பாரபட்சமான தீர்ப்பு இன்று நிலையான ஷேக் ஹசீனா அரசை கவிழ்த்துவிட்டது. ஹசீனா கட்சி சேர்ந்த பங்களாதேஷில் உள்ள ரெண்டு சதவீத மக்களுக்கு முப்பது சதவீத கோட்டா கொடுத்ததன் விளைவு இன்று ஹசீனா ஆட்சி கவிழ்ந்துவிட்டது. கோட்டா அரசியலால் ஒரு அரசு கவிழ்ந்துவிட்டது. கோட்டா அரசியலால் காங்கிரஸ் இந்தியாவில் காணாமல் போய்விட்டது. நாளை திமுகவிற்கு இதே நிலைமை தான்.


Sundar
ஆக 05, 2024 22:21

மமதா இப்போதாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும்.


kulandai kannan
ஆக 05, 2024 21:14

வாரிசு அரசியல்வாதிகளுக்கு இது எச்சரிக்கை.


M Ramachandran
ஆக 05, 2024 21:11

முட்டா பயல்கள் முஜுபீர் ரகுமான் சிலைய உடைத்தாய் ஆற்று கொள்ள முடியாது. பாகிஸ்தான் சீனா உள்குத்து வேலையாக யிருக்குமோ


RAMAKRISHNAN NATESAN
ஆக 05, 2024 19:42

மீண்டுமொருமுறை மூர்க்கம் தனிநாடு கேட்குமா ????


Sivagiri
ஆக 05, 2024 19:36

அப்படியானால் அங்கே பிரதமருக்கு அதிகாரம் இல்லை ? . . உலக நாடுகளின் அரசுகளில் , அமெரிக்க ஜனாதிபதியை விடவும் , வானளாவிய அதிகாரம் இந்திய பிரதமருக்குத்தான் கொடுக்கப்பட்டுள்ளது , , - - நமது எல்லைகளை மூடி , காப்பாத்திக்கிட வேண்டியதுதான் , , ,


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை