உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கொடூரமானது; சொல்கிறார் முகமது யூனுஸ்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கொடூரமானது; சொல்கிறார் முகமது யூனுஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கொடூரமானது. அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களை பாதுகாக்கும் வகையில் மாணவர்களின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்' என வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.இட ஒதுக்கீடு தொடர்பாக, மாணவர்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு, நாட்டை விட்டு வெளியேறினார். நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ், 84, தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1yhxnec9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

மாணவர்களின் கையில்!

இந் நிலையில் வங்கதேசத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிகழ்ச்சியில் முகமது யூனுஸ் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:''நாட்டில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல் கொடூரமானது. ஹிந்து, கிறிஸ்தவ, பவுத்தம் உள்ளிட்ட அனைத்து மத மக்களையும் மாணவர்கள் பாதுகாக்க வேண்டும். உங்கள் முயற்சியை வீணாக்க பலர் திட்டமிடுகின்றனர். இந்த முறை தோல்வி அடைய வேண்டாம். வங்கதேசத்தை முன்னேற்றுவது மாணவர்களின் கையில் உள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

பேசும் தமிழன்
ஆக 12, 2024 08:22

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா..... அப்படியே ....


R Kay
ஆக 12, 2024 02:51

யார் என்ன சொன்னாலும் எங்கள் செல்லம், நாலடியார், சித்தா எல்லாம் வாயை திறக்க மாட்டார்கள். துட்டு யார் தருகிறார்களோ, கருப்பு பணத்தை பதுக்க யார் உதவுகிறார்களோ, அவர்களுக்காக மட்டுமே கூவுவார்கள்.


பேசும் தமிழன்
ஆக 11, 2024 20:55

அங்கே சிறுபான்மையினர் என்றால் இந்துக்கள்.... அதை தெளிவாக கூறுங்கள்.... இல்லையேல் எங்கள ஊர் திருட்டு திராவிட மாடல் ஆட்கள்.... சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்று உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்.... பப்பு கம்பெனி ஆட்களை கேட்கவே வேண்டாம் !!!


தத்வமசி
ஆக 11, 2024 18:53

நோபல் பரிசு வாங்கி விட்டால் எல்லாம் கற்ற வித்தகராக ஆகிவிடுவாரா ? வெளிநாட்டு கைக்கூலியாகத் தான் பதவியில் இருக்க வேண்டும்.


Sivakumar
ஆக 11, 2024 18:50

சிறுபான்மையினர், secularisam எல்லாம் இந்தியாவுல கெட்டவார்த்தைகள் ஆயிற்றே. ஓ, இப்ப பாதிப்பு நமக்கு, அப்ப இந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தலாம். இந்த உலகத்தில் எல்லாரும் எங்காவது எதோ ஒரு விதத்தில் சிறுபான்மையினர் தான். அது பணத்திலோ, அல்லது மொழியிலோ, கல்வியிலோ, தோற்றத்திலோ, உடல் பலத்திலோ, உள்ள பலத்திலோ நிறத்திலோ. அதனால் தான் நமக்கு தெரிந்த சிறுபான்மையினரை மரியாதையோடு நடத்தினால் நாம் எங்காவது சிறுபான்மையாக இருக்கும்போது அது உதவி செய்யும்


பேசும் தமிழன்
ஆக 12, 2024 08:18

இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம்.... ஆகிய நாடுகளில் சுதந்திரம் பெற்ற போது இருந்த சிறுபான்மையினர் எண்ணிக்கை... மற்றும் இப்போது இருக்கும் அவர்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டு பார்த்தாலே உண்மை தெரியும்... இந்தியாவில் இருப்பது போன்ற சலுகைகள் வேறு எந்த நாட்டிலும் கிடைப்பதில்லை.... நீங்கள் சலுகை கொடுக்கா விட்டாலும் பரவாயில்லை.... அவர்களின் அடிப்படை உரிமைகளை பறிக்க வேண்டாம்.


GMM
ஆக 11, 2024 17:37

மாணவர்கள் ஒழுக்கத்துடன் பயின்று இருக்க வேண்டும். தமிழகம் போல் இளைஞர்கள் அனைவரும் பட்டம் கொடுத்து இருந்தால் தான் இவ்வளவு கல்லெரி கூட்டம் சேரும். மாணவ பருவத்தில் பணம் இருக்காது. பண பட்டுவாடா யார்? 1971 ல் பாக். ராணுவம் பல்கலை மாணவியரை கொடூரமாக கற்பழித்த தகவல் உண்டு. குதித்து இறந்தவர் பலர். பின் தான் விடுதலை. போராட்டத்தில் மாணவியர் இல்லை. சில சிறுபான்மை மக்கள் இல்லை. ஹிந்துக்கள் மீது தாக்குதல். இது மாணவர்கள் போர்வையில் மத ஆதிக்க போராட்டம்.? யூனுஸ் விலகுக.


கண்ணன்
ஆக 11, 2024 17:29

புண்ணக்கு நிதி நிபுணர்!


Sivagiri
ஆக 11, 2024 16:54

இங்கே இருந்து முஸ்லிம் கட்சி - செக்குலரிஸ்ம் பேசுபவர்கள், அங்கே தூது அனுப்பி சிறுபான்மையினர் மீதான தாக்குதலை நிறுத்த அழுத்தம் கொடுக்கலாம் , இலங்கைல்கு கனிமொழி ராஸா எல்லாம் போயி வந்தா மாதிரி ,


வாய்மையே வெல்லும்
ஆக 11, 2024 16:46

சொன்னாங்க கோவிச்சுக்கமாட்டேங்களே ... மொஹம்மது யூனிஸ் நம்ம ஊரு ராவுளு விட நூறு மடங்கு மேல. ஹிந்துக்களை வங்காளத்தில் அடித்து துன்புறுத்தி கொண்டு இருக்கையில் அதை எதிர்த்து தட்டிக்கேட்க துப்பு இல்லாமல் இன்னும் மவுனம் காப்பது இவரிடம் ஹிந்துக்களுக்கு எதிராக எவ்வளவு வினை உள்ளது என்பது திண்ணம்/ நிதர்சனம் . வோட்டு பிச்சை முக்கியமாச்சே இந்டி கூட்டணிக்கு


அப்புசாமி
ஆக 11, 2024 16:36

ஹசீனா ஜீ அவிங்களை காட்டுமிராண்டிகள்னு சொன்னாரு. உண்மைதான் போலிருக்கு.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை