உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அம்மாவுக்கு அரசியலே வேண்டாம்; ஆளை விட்டாப்போதும்: சொல்கிறார் ஹசீனா மகன்

அம்மாவுக்கு அரசியலே வேண்டாம்; ஆளை விட்டாப்போதும்: சொல்கிறார் ஹசீனா மகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: 'வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இனி அரசியலுக்கு வரமாட்டார்' என்று அவரது மகன் சஜீப் வசத் ஜோய் திட்டவட்டமாக கூறி உள்ளார்.

ஒரே நாளில் மாறிய நிலைமை

எதுவும் நிரந்தரமில்லை, நிலைமை எப்போது வேண்டுமானாலும் மாறலாம் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக வங்கதேச அரசியல் சூழலையும், அங்கு ஏற்பட்டுள்ள கலவரத்தையும் கூறலாம். நேற்று வரை பிரதமர், இன்றோ உயிருக்கு பயந்து தமது சகோதரி ஷேக் ரேஹானாவுடன் நாட்டைவிட்டே ஓட்டம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் அந்நாட்டின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஷேக் ஹசீனா.

லண்டனில் தஞ்சம்?

ஷேக் ஹசீனா லண்டனில் தஞ்சம் அடைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இனி அரசியலுக்கு அவர் திரும்ப மாட்டார் என்று அவரது மகனும், ஹசீனாவின் அரசியல் ஆலோசகராக பணியாற்றியவருமான சஜீப் வசத் ஜோய் உறுதிபட தெரிவித்து உள்ளார்.

அதிருப்தி

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது; வங்கதேசத்தில் நிலவி வரும் சம்பவங்களினால் அவர் மிகவும் அதிருப்தியுடன் உள்ளார். நாட்டையே ஹசீனா தலைகீழாக மாற்றினார். அவர் வரும்போது, ஏழை நாடாக இருந்த வங்கதேசம் இப்போது வளரும் ஆசிய நாடுகளில் ஒன்றாக உள்ளது.

13 போலீசார் உயிரிழப்பு

கலவரத்தினால் நேற்றைய தினம் மட்டுமே 13 போலீசார் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் மக்களை கொல்லும் போது போலீசார் என்ன செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Mr Krish Tamilnadu
ஆக 06, 2024 10:53

இதற்கு தான் வெளிநாட்டு சுற்றுபயணம் மேற்கொள்கிறார்களோ? பிரதமர்கள். தப்பி ஒட எந்த நாடு வசதியானது என தெரிந்து கொள்ள. அவர் உடனே லண்டன் செல்வது தான், நமக்கு நல்லது. ஆகஸ்ட் 15 வருகிறது. மற்றும் அவரை இந்தியாவில் வைத்து கொண்டு, வங்கதேச எல்லையில் தற்காப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவ்வளவு உசிதம் அல்ல.


Ambikapathy Muniaraj
ஆக 06, 2024 10:39

அலெர்ட்


UTHAYA KUMAR
ஆக 06, 2024 09:14

இங்க ஒரு குடும்பம் இருக்கு....


RAMAKRISHNAN NATESAN
ஆக 06, 2024 09:09

மூர்க்கத்துக்குப்பிடித்தது வாரிசு அரசியல்.. உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு வெளியேறிய பின் அரசியலே வேண்டாம் ......


Riyaz shaikh
ஆக 06, 2024 12:21

நகைப்புக்கிடமானது.வெட்கமாயில்ல அப்படி சொல்வதற்கு?


Nagarajan D
ஆக 06, 2024 09:03

பாரதத்திலும் இப்படி நடந்து அந்த காந்தி குடும்பத்தையும் நேரு குடும்பத்தையும் ஒழித்து காட்டினால் தான் தேசம் உருப்படும்... காந்தி தனது கூஜாவான நேருவை பிரதமராக வைத்து சென்றார்... அந்த நேரு குடும்பம் தேசம் எதோ இவருங்க சொத்து போலவும் தாங்கள் தான் நாட்டை ஆள தகுதியானவனுங்க மற்ற யாருக்கும் எந்த மரியாதையும் கிடைக்க கூடாது என்று ஆடுறாங்க... நேருவின் வாரிசு எப்படி காந்தி ஆனார்


Kannan
ஆக 06, 2024 12:26

இங்கேயும் ஒரு திருட்டு கூட்டம் இருக்கு...அதுகளையும் விரட்ட வேண்டும்...


sair Bihari
ஆக 06, 2024 14:47

காந்தி குடும்பமும் அவர்களோடு உண்மையாக ஒத்துழைத்த வீர தியாகிகள் இல்லையெனில் நீங்களெல்லாம் இன்றளவும் ...


mindum vasantham
ஆக 06, 2024 08:57

இஸ்லாமியர்கள் மூளை அற்றவர்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் வாழ்கின்றனர், இது அமெரிக்கா நடத்திய கலவரம் , உழைக்காமல் உண்டு வாழும் சிலர் இதில் ஈடுபட்டுள்ளனர்


Bye Pass
ஆக 06, 2024 08:53

தமிழகத்தில் இந்த மாதிரி நடக்க வாய்ப்பிருக்கிறது


sair Bihari
ஆக 06, 2024 14:44

கண்டிப்பாக இது நடந்தே தீரும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை