உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு

உலகின் சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசி தேர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

2023-24 ஆம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாஸ்மதி அரிசியை பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது.சமீபத்தில் டேஸ்ட் அட்லஸ் வெளியிட்ட சிறந்த உணவுகள் கொண்ட 100 நாடுகளில், இந்தியாவுக்கு 11ஆவது இடம் அளித்திருந்தது.நீளமான, தனித்துவமான சுவை, வாசனை கொண்ட பாஸ்மதி அரிசி, இந்திய துணைக்கண்டத்தில் அதிகளவில் உற்பத்தியாகிறது.இந்தியாவில் மட்டும் சுமார் 34 பாஸ்மதி அரிசி ரகங்கள் பயிரிடப்படுகிறது.பாஸ்மதிக்கு அடுத்தபடியாக இத்தாலியைச் சேர்ந்த அர்போரியோ மற்றும் போர்ச்சுகலின் கரோலினோ ரைஸ் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Loganathan Kuttuva
ஜன 16, 2024 16:11

டேராடூன் பாசுமதி அரிசி தான் அதிக அளவில் ஏற்றுமதியாகிறது .


சதிஸ்தங்கவேல
ஜன 14, 2024 01:35

இந்த விருது வழங்கியவருக்கு அரிசி வகைகளை பற்றி அறியவில்லை போலும்..


g.s,rajan
ஜன 13, 2024 22:54

உலக அளவில் மற்றும் இந்தியாவில் இனி பிரியாணி விற்பனை மேலும் பிச்சுக்கிட்டுப் போகும்.....


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி