மேலும் செய்திகள்
போக்சோ வழக்கில் 25 ஆண்டு சிறை
27-Aug-2025
லாகூர்:நம் அண்டை நாடான பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த ஜைன், 17, பப்ஜி விளையாட்டுக்கு அடிமையானார். கடந்த, 2022ல் ஜைன், மணிக்கணக்கில் பப்ஜி விளையாடிய நிலையில் மயங்கி விழுந்துள்ளார். மேலும் தோற்ற ஆத்திரத்தில் இருந்த சிறுவன், துப்பாக்கியால், தாய், சகோதரர், இரண்டு சகோதரிகள் என நான்கு பேரையும் சுட்டுக் கொன்றார். இது தொடர்பான வழக்கை விசாரித்த லாகூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஜைனின் வயது காரணமாக, மரண தண்டனைக்கு பதிலாக சிறுவனுக்கு ஒவ்வொரு கொலைக்கும் தலா 25 ஆண்டுகள் என, நான்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இதை ஒரே நேரத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, 100 ஆண்டுகள் அவர் சிறையில் அடைக்கப்படுவார்.
27-Aug-2025