உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

தென் ஆப்ரிக்காவில் நடந்த ஜி20 மாநாடு வெற்றி: பிரதமர் மோடி பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவர் பயணத்தை முடித்து கொண்டு, டில்லி திரும்பினார்.தென் ஆப்ரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கிற்கு மூன்று நாள் பயணமாக பிரதமர் மோடி சென்று இருந்தார். அவர் ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். இந்தியா-பிரேசில்-தென் ஆப்ரிக்கா தலைவர்கள் உச்சி மாநாட்டில் உரையாற்றினார். தென் ஆப்ரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை நேற்று சந்தித்த பிரதமர் நரே ந்திர மோடி, வர்த்தகம், முதலீடு, அரிய வகை கனிமங்கள் இறக்குமதி, செயற்கை நுண்ணறிவு தொடர்பாக பேச்சு நடத்தினார்.இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, ஜப்பானின் சனே டகைச்சி மற்றும் கனடாவின் மார்க் கார்னி உள்ளிட்ட பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். தென் ஆப்ரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி டில்லி திரும்பினார். இந்த பயணம் குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:வெற்றிகரமான ஜோஹன்னஸ்பர்க் (தென் ஆப்ரிக்கா) ஜி20 மாநாடு, நிலையான வளர்ச்சியை உருவாக்கும். உலகத் தலைவர்களுடனான எனது சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தன. மேலும் பல்வேறு நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தும். ஜி20 உச்சிமாநாட்டை ஏற்பாடு செய்ததற்காக தென் ஆப்ரிக்காவின் அற்புதமான மக்கள், அதிபர் சிறில் ராமபோசா மற்றும் தென் ஆப்ரிக்கா அரசிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

mganesan
நவ 24, 2025 13:30

ப்ளீஸ் ஆஃப்ரொஞ்ச் தமிழ்நாடு ஸ்டேட் கோவேர்ந்மேன்ட்


S.kausalya
நவ 24, 2025 12:47

எங்களுக்கு G20 வெற்றி என்பது எல்லாம் தேவை இல்லாத ஒன்று. தினமும் ஏதாவது ஒரு திட்டத்தில் கீழ் பணம் இலவசம் தருவீர்களா? பெரியவர்களுக்கு பணம் நடுத்தர வயதினருக்கு சாராயம் இளைஞர்களுக்கு கஞ்சா பெண்களுக்கு இலவசம் மற்றும் பணம் சிறுவர்களுக்கு படிப்பை தவிர சிறு தேவைகள் இவை தான் எங்களுக்கு வேண்டும். G20 யினாலோ மோடியாலோ எங்களுக்கு என்ன பயன்


Gokul Krishnan
நவ 24, 2025 12:35

பிரதமர் அவர்களே இத்தனை முறை வெளிநாட்டு பயணத்தின் கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் முன்னேற்றம் உண்டா 1. ஐ நா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர உறுப்பினர் பதவி 2 அமெரிக்கா டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு 3. டெல்லியின் மிக மோசமான காற்று மாசுபாடு 4. விஜய் மல்லையா, நீரவ் மோடி, லலித் மோடியை திரும்ப இந்திய கொண்டு வருதல் 5. இந்தியாவிற்கு பின் தொடங்கப்பட்ட இந்தோனேசியாவில் புல்லட் ரயில் சேவை தொடங்கி உள்ளது


அப்பாவி
நவ 24, 2025 09:57

திரும்ப திரும்ப பாத்தவங்களையே பாத்து பேசினதையே பேசி சாப்புட்டதயே சாப்புட்டு வந்தாலே வெற்றிதான்.


kumar
நவ 24, 2025 09:33

பிரதமர் மோடிக்கு உலக நாடுகளில் எங்கு சென்றாலும் மரியாதை அதிகம் இருக்கிறது


பாலாஜி
நவ 24, 2025 09:17

யாருக்கு வெற்றி ?


Ramesh Trichy
நவ 24, 2025 09:16

Mr. Trump வராததே மிக பெரிய வெற்றிதான். தென்னாப்பிரிக்கா முற்றும் பிரேசில் அதிபர்கள் மதித்து இருக்க மாட்டார்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை