உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தினமும் 1,600 கி.மீ., ‛‛பறந்து பறந்து பணி செய்யும் ஸ்டார்பக்ஸ் சிஇஓ

தினமும் 1,600 கி.மீ., ‛‛பறந்து பறந்து பணி செய்யும் ஸ்டார்பக்ஸ் சிஇஓ

வாஷிங்டன்: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ)பொறுப்பேற்க உள்ள பிரையன் நிக்கோல், 1,600 கி.மீ.,தூரம் ஜெட் விமானத்தில் பறந்து சென்று பணியாற்ற உள்ளார். காபி நிறுவனமான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் அடுத்த மாதம் பதவியேற்க உள்ளார்.இவர், தற்போது கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமானது, 1,600 கி.மீ., தூரத்தில் உள்ள சியாட்டில் நகரில் அமைந்துள்ளது. அவர் அலுவலகத்திற்கு வந்து பணியாற்ற கார்பரேட் ஜெட் விமானத்தை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் கொள்கைப்படி, வாரத்தில் மூன்று நாட்களாவது அலுவலகத்தில் வந்து கட்டாயம் பணிபுரிய வேண்டும். இதனால், எந்த பணியும் இல்லை என்றாலும் பிரையன் நிக்கோல் அலுவலகம் வர வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

சம்பளம்

இவருக்கு அடிப்படை சம்பளமாக ஒவ்வொரு ஆண்டும் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் 13 .42 கோடி ரூபாய்) வழங்கப்பட உள்ளது. மேலும் அவரின் செயல்பாடுகளின் அடிப்படையில் போனசாக 3.6 முதல் 7.2 மில்லியன் டாலர் வழங்கப்படும். இதுபோன்ற வசதிகளை பிரையன் நிக்கோல் பெறுவது இது முதல் முறை அல்ல. அவர் தற்போது பணியாற்றும் சிப்போடில் நிறுவனத்திலும் இதே மாதிரியான சலுகைகளை அவர் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. அமெரிக்காவில், ஒரு சாமானிய ஊழியருடன் ஒப்பிடுகையில், அதிக திறன் வாய்ந்த உயர் பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு இத்தகைய வசதியான சலுகைகள் வழங்கப்படுவது பொதுவானவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ