உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் குற்றம் குறித்து விசாரணை : இலங்கைக்கு பிரிட்டன் உத்தரவு

போர் குற்றம் குறித்து விசாரணை : இலங்கைக்கு பிரிட்டன் உத்தரவு

கொழும்பு : 'இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்டப் போரில் நடந்த போர் குற்றங்கள் குறித்து, அந்நாட்டு அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என, பிரிட்டன் ராணுவ அமைச்சர் டாக்டர். லியம் பாக்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின், மறைந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நினைவு கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த, பிரிட்டன் ராணுவ அமைச்சர் டாக்டர். லியம் பாக்ஸ், கொழும்பில் அளித்த பேட்டி: இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே 2009ம் ஆண்டின் இறுதியில் நடந்த போரில், பெரும்பாலான அப்பாவி மக்கள் வெடிகுண்டுகள் வீசி, சட்டத்திற்கு விரோதமாக கொல்லப்பட்டுள்ளனர். இறுதிக் கட்டப் போரில் நடந்த வன்முறை பற்றி, சர்வதேச மனித உரிமை ஆணையமும், மற்ற சர்வதேச அமைப்புகளும் கூறி வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக, இலங்கை அரசு விசாரணை மேற்கொள்ள வேண்டும். முழுவதுமாக விசாரணை மேற்கொண்டு பொறுப்பானவர்கள் தனிப்பட்ட நபர்களாக இருந்தாலும், சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு பிரிட்டன் அமைச்சர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை