உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை அமல்: வீடியோ வெளியிட்டு ஆஸி., பிரதமர் பெருமிதம்

16 வயதுக்கு உட்பட்டோருக்கு சமூக வலைதள தடை அமல்: வீடியோ வெளியிட்டு ஆஸி., பிரதமர் பெருமிதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கான்பெர்ரா: 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த தடை விதித்தது குறித்து ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், ''குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம்'' என தெரிவித்துள்ளார்.பேஸ்புக், இன்ஸ்டராகிராம், யுடியூப், டிக்டாக்' போன்ற சமூக வலைதளங்கள் உலகம் முழுதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. சமூக வலைதளங்களால் சிறுவர் - சிறுமியர் சீரழியும் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eweii3wk&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

இன்று முதல் அமல்

எனவே, இளம் தலைமுறையினர் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், உலகிலேயே முதல் நாடாக, 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது. இன்று டிச., 10ம் தேதி முதல் இந்த தடை முழுவீச்சில் அமலாகவுள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பானீஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது: 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடைவிதித்த, உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறி உள்ளது. இது பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் மன அமைதியை உருவாக்கும். இது அவர்கள் குழந்தைப் பருவத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது. ஆஸ்திரேலியா முழுவதும், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்கள் இல்லாமல் தங்கள் நாளை சற்று வித்தியாசமாகத் தொடங்குகிறார்கள். இது ஒரு பெரிய மாற்றம். இது உண்மையில் முக்கியமானது. இன்றைய மாற்றம் உங்கள் குழந்தைகளை சமூக வலைதளத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். ஆஸ்திரேலிய குடும்பங்கள் குழந்தைகள் குழந்தைகளாக இருப்பதற்கான உரிமையையும், பெற்றோர்கள் அதிக மன அமைதியைப் பெறுவதையும் வலியுறுத்தும் நாள் இது. இன்றைய நாள் பெருமை வாய்ந்தது. இவ்வாறு அந்தோணி அல்பானீஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

M. PALANIAPPAN, KERALA
டிச 10, 2025 12:53

நல்ல முடிவு , உலகம் முழுவதும் அமல் படுத்தலாம், குழந்தைகள் குழந்தை பருவத்தை நன்றாக அனுபவிக்கலாம்


ASIATIC RAMESH
டிச 10, 2025 11:30

வாழ்த்துக்கள். மிகவும் உபயோகமான துணிச்சலான நடவடிக்கை... உலகம் முழுதும் அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். ஆஸ்திரேலியா பிரதமருக்கு சில போலி ஜனநாயக வியாதிகள் கண்டிப்பாக எதிர்ப்பார்கள்... அரசியல் புரட்சியே நடைபெறலாம்...


hariharan
டிச 10, 2025 11:26

Excellent. He has real responsiblity and vision.


MUTHU
டிச 10, 2025 11:20

குழந்தைகளுக்கு குழந்தை பருவத்தை கொடுக்கிறோம் மேற்கத்திய சிந்தனை கொண்ட ஒரு தலைவரின் தொலைநோக்கு பாராட்டத்தக்கது. இந்தியா தலைவர்கள் தான் தங்கள் இளைய சமுதாயத்தை போதை மற்றும் அடிதடி கலாச்சாரத்தில் பாழாக்கிக்கொண்டுள்ளனர்.


Skywalker
டிச 10, 2025 10:39

This entire young generation is getting spoiled by useless internet slop, so this law must be brought in india also, but some will protest calling it oppression, but there is no right to internet for children, but right to education and wellbeing , they must think sensibly


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை