உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சர்வதேச மாணவர்களுக்கான அனுமதியை மேலும் குறைத்தது கனடா

சர்வதேச மாணவர்களுக்கான அனுமதியை மேலும் குறைத்தது கனடா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கடந்த ஆண்டை காட்டிலும் சர்வதே மாணவர்களுக்கான அனுமதியை கனடா அரசு, மேலும் 10 சதவீதம் குறைத்திருப்பது இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கனடா நாட்டின் சமூக மற்றும் பொருளாதார கட்டமைப்பு வளர்ச்சியில் சர்வதேச மாணவர்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். சில கல்வி நிறுவனங்கள் அதிகளவு சர்வதேச மாணவர்களை அனுமதித்து வருகிறது. இதனால், அந்நாட்டு அரசுக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் மருத்துவ பிரச்னைகளை உருவாக்கியது. இதனை சமாளிக்க வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என கனடா அரசு அறிவித்து இருந்தது.இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டே புதிய கட்டுப்பாடுகளை கனடா அரசு அறிவித்துள்ளது. இதன்படி, வெளிநாட்டு மாணவர்கள் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள். சில குறிப்பிட்ட பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கு வேலை செய்வதற்கு வழங்கப்படும் விசாக்களை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ள கனடா அரசு, 2024ல் 4,37,000 மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்படும் எனக் கூறியது. இது 2023ல் 6,50,000ஆக இருந்தது. இந்த நிலையில், 2024ம் ஆண்டில் சர்வதேச மாணவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விசா அளவில், இந்த ஆண்டு மேலும் 10 சதவீதம் குறைப்பதாக கனடா குடியேற்றத்துறை தெரிவித்துள்ளது. இது கனடாவுக்கு சென்று கல்வி கற்க விரும்பும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

கல்யாணராமன்
ஜன 25, 2025 10:25

இவர் பதவி விலகி விட்டார் என்று ஏற்கனவே செய்தி வந்தது.


KavikumarRam
ஜன 25, 2025 11:43

அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை இவரே பிரதமராக தொடர்வார்ங்கிறது அவர்களது அரசியலமைப்பு சட்டம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை