உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடா அரசியலில் பாக்., ஆதிக்கம்: உளவுத்துறை இயக்குனர் பரபரப்பு

கனடா அரசியலில் பாக்., ஆதிக்கம்: உளவுத்துறை இயக்குனர் பரபரப்பு

ஒட்டாவா: கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்துவதாகவும், இங்குள்ள காலிஸ்தானியர்களுக்கு ஆதரவாகவே அவர்கள் செயல்படுவதாகவும் கனடாவின் உளவுத்துறை இயக்குனர் வனீசா லாயட் பேசியது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.கனடாவில் வசித்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டியது, இந்தியா - கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியது.இந்த விவகாரத்தில் இந்திய அரசு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதாக, கனடா கடந்த ஓராண்டாகவே குற்றஞ்சாட்டி வருகிறது.இதற்கிடையே, லாரன்ஸ் பிஷ்னோய் போன்ற சமூக விரோத கும்பல்களின் உதவியுடன், கனடாவில் வன்முறைகளை இந்தியா கட்டவிழ்த்து விடுவதாகவும், பல கொலைகளை அரங்கேற்றி வருவதாகவும், கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி சமீபத்தில் தெரிவித்தார். இது, இருநாட்டு உறவை மேலும் சீர்குலைத்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள கனடா துாதரக அதிகாரிகள் ஆறு பேரை வெளியேற்றியதுடன், கனடாவுக்கான இந்திய துாதர் சஞ்சய் குமார் வர்மாவை நம் அரசு திரும்பப் பெற்றது.குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆறு இந்திய ஏஜென்ட்களை கனடாவில் இருந்து வெளியேறும்படி அந்நாடு உத்தரவிட்டது; அவர்கள் மீண்டும் கனடாவுக்குள் நுழையவும் தடை விதித்தது. இதற்கிடையே, கனடாவின் உளவு அமைப்பான கனடா செக்யூரிட்டி இன்டெலிஜென்ஸ் சர்வீசின் இயக்குனர் வனீசா லாயிட் கடந்த மாதம் தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதன் விபரம்:கனடா அரசியல் களத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவின் மதிப்பை குறைக்கும் பணியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கனடாவில் உள்ள காலிஸ்தானியர்களுக்கு அவர்கள் நேரடியாக ஆதரவு அளிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.ஹர்தீப் சிங் நிஜ்ஜார் விவகாரம் தற்போது சூடுபிடித்துள்ள நேரத்தில், வனீசாவின் இந்த பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இந்தியா மீது அமெரிக்கா புகார்

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மாத்யூ மில்லர் கூறியதாவது:கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. அவற்றை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம். விசாரணைக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அவர்கள் அதை செய்ய மறுக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.பிரிட்டனைச் சேர்ந்த, எப்.சி.டி.ஓ., எனப்படும் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கனடா அரசின் விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை நாங்கள் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கனடாவின் நீதித்துறையின் மீது பிரிட்டனுக்கு முழு நம்பிக்கை உள்ளது.இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை அளிப்பது அவசியம். கனடாவின் சட்ட நடவடிக்கைக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு அளிப்பதே, இந்த விவகாரத்தில் அடுத்த நல்ல முடிவாக அமையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் கூறுகையில், ''கனடா தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அது மிக கவலை அளிக்கக் கூடிய ஒன்றாக இருக்கும்,'' என்றார். ஆஸ்திரேலிய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், 'கனடாவின் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அனந்தராமன்
அக் 17, 2024 11:24

நிஜ்ஜார் ஒரு பயங்கரவாதி. அவன் எப்படி இறந்தால் இந்தியாவுக்கு என்ன? ஒழிந்தான் அவ்வளவுதான்.. இந்திய அரசு அவன் சாவில் ஏன் ஒத்துழைக்க வேண்டும்?


Anand
அக் 17, 2024 10:47

அமெரிக்காவை நம்பவே கூடாது, கூட இருந்து குழி பறிப்பான்... நமக்கு எப்போதுமே உற்ற நண்பன் ரஷியா தான்..


Rajan
அக் 17, 2024 09:04

தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க தவறும் நாடுகள் எப்போதும் போடும் கூச்சல்


SRIDHAAR.R
அக் 17, 2024 08:32

தேச விரோத சக்திகளை கடவுள் பார்த்துகொள்வார்


Dharmavaan
அக் 17, 2024 08:14

எந்த வெள்ளைகார மடையனும் கனடா விடம் ஆதாரம் கேட்கவில்லை ஏன்


Duruvesan
அக் 17, 2024 08:04

அவனே ஆதாரம் இல்லைனு சொல்லிட்டேன். இவனுங்க ஆட்டம்


VENKATASUBRAMANIAN
அக் 17, 2024 07:41

அமெரிக்கா எதற்காக மூக்கை நுழைக்கிறது. கனடாவை கண்டிக்க துப்பில்லை


Barakat Ali
அக் 17, 2024 06:56

பன்னூன் ஐ அமெரிக்கா பாதுகாப்பாக வைத்துள்ளது ........ இந்திய-கனடிய விவகாரங்களில் தலையிடுகிறது ....... காலிஸ்தானிகள்-பாக்-கனடா-அமெரிக்கா இடையே ஆழமான நட்பும், தொடர்பும் உள்ளது ...... ஆனால் மத்திய பாஜக அரசு சிறுபான்மை வாக்குகளை இழந்துவிடுவோமோ என்று அஞ்சி செய்ய வேண்டியதைச் செய்யாமல் உள்ளது ......


N.Purushothaman
அக் 17, 2024 06:46

ஒரு நாட்டில் ஏற்படும் மதம் சார்ந்த பிரிவினை அதனால் ஏற்படும் வன்முறை, உயிரிழப்புக்கள் இது போன்ற வலிகளை உணராத நாடுகள் எளிமையாக கருத்து என்கிற பெயரில் விஷத்தை கக்கிவிட்டு சென்று விடலாம் ...அது அவர்கள் நாட்டில் ஏற்படும் போது அப்போதாவது உணர்வார்கள் என நம்புவோம் .....உலகில் உள்ள அத்தனை பிரிவினைவாதிகள்,பயங்கரவாதிகளுக்கு புகலிடம் கொடுக்கும் கனடா விரைவில் பிரிவினை கோஷத்தை சந்திக்கும் ....


Kasimani Baskaran
அக் 17, 2024 05:12

இந்தியாவில் தீவிரவாதி என்று சொல்லப்பட்டவர்களை ஏன் கனடா தனது குடிமகன் என்று பாதுகாக்க முயல்கிறது? அடுத்த நாட்டு தீவிரவாதிகளை பாதுகாப்பது சமூக விரோதம் என்பது கூட பல நாடுகளுக்கு தெரியவில்லை என்பது துரதிஷ்ட வசமானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை