உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் உறவு மோசமடைய யார் காரணம்? கனடா மக்கள் சொல்வது என்ன?

இந்தியாவுடன் உறவு மோசமடைய யார் காரணம்? கனடா மக்கள் சொல்வது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: இந்தியா உடனான உறவை, ஜஸ்டின் ட்ரூடோ அரசு சரியாக பேணவில்லை என கனடா மக்கள் 39 சதவீதம் பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.காலிஸ்தான் பயங்கரவாதி கனடாவில் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்திய அரசு மீது ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதனால், இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய துாதரக அதிகாரிகளை அந்நாடு கண்காணித்தது. இதன் காரணமாக, அந்நாட்டிற்கான இந்திய தூதரை மத்திய அரசு திரும்பப் பெற்றது. முன் எப்போதும் இல்லாத வகையில் இரு நாட்டு உறவு பின்னடைவை சந்தித்து உள்ளது.இந்நிலையில், இது தொடர்பாக 'அங்கஸ் ரீட் நிறுவனம்(Angus Reid Institute)' மற்றும் கனடாவின் ஆசிய பசுபிக் பவுண்டேசன் அமைப்பு இணைந்து கனடா மக்களிடம் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது.அதில் கூறப்பட்டு உள்ளதாவது;இந்தியா உடனான உறவை கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ அரசு சரியாக பேணவில்லை என நம்புகிறீர்களா என்ற கேள்விக்கு ஆதரவாக 39 சதவீதம் பேரும், எதிராக 32 சதவீதம் பேரும், 29 சதவீதம் பேர் உறுதியாக கூற முடியாது என பதிலளித்து உள்ளனர்.அதேபோல் 39 சதவீதம் பேர் ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் ஆக இருக்கும் வரை இரு நாட்டு உறவு மேம்படாது எனவும், 34 சதவீதம் பேர் இந்தியப் பிரதமர் ஆக மோடி இருக்கும் வரை உறவு மேம்படாது எனவும் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

V.Mohan
பிப் 07, 2025 07:22

ஜஸ்டின ட்ருடோ சாமர்த்தியமான அரசியல் வியாதி காலிஸ்தான் கேட்கும் சீக்கியர்கள் பெரும்பாலானவர்கள் உடல் உழைப்பு வேலை செய்பவர்கள். இந்த வேலைகள் செய்வதற்கு அதிகம் படிக்காத முரட்டு இளைஞர்கள் தங்களது பொன்விளையும் பூமியை விற்று, சவுகரியமான வாழ்க்கை முறையை தேடி வந்தவர்கள். எனவே ஏற்கனவே கனடாவில் இருப்பவர்களை அனுசரித்து ஆதரவுடன் வாழ்கிறவர்கள். இவர்கள் எல்லாரும் சுலபத்தில் மூளைச்சலவை செய்யப்பட தயாராக இருந்தினால், காலிஸ்தான் என்கிற பொய்யான பிம்பத்திற்கு உடன்பட்டு அதனை உண்மை என நம்பி தற்சமயம் உறுதியாகிவிட்டனர். பாவம் அவர்கள் மிருக பலத்துடன் இருந்தும் இறையாண்மை இல்லாத காரணத்தினால் சுற்றி உள்ள நாடுகள் உதவிக்கு வராததினால் வேட்டையாடப்பட்டு அழித்து ஒழிக்கப்பட்ட தமிழ் ஈழ விடுதலைக்கு ஆசைப்பட்டவர்களின் நிலையை உணராமல் இருக்கின்றனர். காலிஸ்தான் பேசும் இந்திய சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து ஓடிய கிரிமினல்களுக்கு ஆதரவு நரும் சீக்கியர்கள், விட்டில் பூச்சிகளாய், சிறிது நேரம் வாழும் ஈசல்களாய் மாண்டு அழிந்து போகவே அதிக வாய்ப்பு உள்ளது.


joe
டிச 07, 2024 15:03

இந்தியாவின் முன்னேற்றம் என்பது ஒரு மக்கள் அடிப்படையிலான மாயையே . இங்குள்ள விலைவாசியின் ஏற்றம் அரசியல் வாதிகளின் ஊழல் என்று அர்த்தம் . இது தெரியாத மக்கள் இன்றும் இங்கு அடிமையாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பது 100% மேல் உண்மை. இதுதான் இந்தியா.


canchi ravi
டிச 06, 2024 16:01

மரியாதை கொடுத்து மரியாதை வாங்கவேண்டும். இந்தியா என்றால் இளிச்சவாயன் என்று நினைத்தால் தகுந்த பதிலடி தேவை.


KRISHNA
டிச 06, 2024 10:03

DHURVESH என்பது உங்களுடைய உண்மையான பெயரா? அல்லது DHURVESH என்கிற போலி பெயரில் COMMENTஆ? சந்தேகமாக இருக்கிறது. தினமலர் வாசகர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக விநாயகர் படமா?


வீரா
டிச 06, 2024 10:21

ஆம் உண்மை.. இவர் toronto தெருக்களில் சுற்றி திரிவதை பார்த்து இருக்கிறேன்


Thiyagarajan S
டிச 06, 2024 06:56

ட்ரூடோ டோ ஒரு முட்டாள்தனமான செயலை செய்து வருகிறார்.‌‌... முஸ்லிம்களைப் போல காலிஸ்தானிகளும் நம்புவதற்கு உரியவர்கள் அல்ல எந்த நேரத்திலும் எதுவும் செய்யக் கூடியவர்கள். சமீபத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கனனடிய மக்களையே கனடாவை விட்டு வெளியேறுங்கள் என்று காலிஸ்தானிகள் கூச்சலிட்டது சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்க்கப்பட்டது. இதன் விளைவாக கன்னடிய மக்களுக்கும் காலிஸ்தானிகளுக்கும் இடைவெளி அதிகமாகிப் போனது. இதை ட்ருடோ உணர்ந்து கொண்டு இந்தியாவிடம் காலிஸ்தானிபயங்கரவாதிகளை ஒப்படைத்து நாட்டில் அமைதியான சூழ்நிலையை உருவாக்க வேண்டும்....


நிக்கோல்தாம்சன்
டிச 06, 2024 06:34

இருவரும் இல்லை அமேரிக்கா தான் காரணம் என்று எழுதினால் ஒத்துக்கொள்வார்களா ? முஸ்லீம் நாடுகள் இப்படி சிதறுண்டு இருப்பதும் , ஏழ்மையில் தவிப்பதற்கும் காரணம் அமெரிக்க தான் என்றல் உணருவர்களா ?


J.V. Iyer
டிச 06, 2024 04:31

பிரிட்டிஷ் கொலம்பியாவை பாதியாக பிரித்து காலிஸ்தான் நாடாக ஜஸ்டின் அறிவிப்பாரா? கியூபெக் மஹானத்தையும் தனிநாடாக மாற்ற இந்தியா உதவி செய்யவேண்டும். இப்போது கனடாவில் பாதிப்பேருக்கு மேல் மேற்கு ஆசியாவிலிருந்து வந்தவர்கள். இன்னும் ஓரிரு வருடங்களில் ஒண்டாரியோ மாகாணத்தை தனிநாடாக கேட்க வாய்ப்புள்ளது. இவற்றில் ஜஸ்டின் மாற்றி, மாற்றி பிரதமராக இருக்கவும் வாய்ப்புண்டு.


K V Ramadoss
டிச 06, 2024 03:02

மேலை நாடுகளில் சாதாரண மக்கள் அரசியல், நாட்டு நடப்பு, உலக நடப்பு இவற்றை பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. கருத்துக் கேட்டாலும் சொல்ல மாட்டார்கள். அதனால் இந்த கருத்துக் கணிப்பு பற்றி நாமும் கவலைப்பட வேண்டாம்.


Kasimani Baskaran
டிச 05, 2024 22:27

காலிஸ்தான் ஆதரவு கட்சியின் ஆதரவில் ட்ருடோ துரதிஷ்டவசமாக பிரதமராக இருந்தார். கூடுதலாக அவர் இடதுசாரி கொள்கையுடைய சீன ஆதரவு அரசியல்வாதி. என்று கனடாவை பிரித்து தனி சீக்கிய நாடு கேட்கிறார்களோ அன்றுதான் கனடாவுக்கு உரைக்கும். அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.


R.THIRUMALAIKUMAR
டிச 05, 2024 22:19

அந்த நாட்டினுடைய பிரதமர்தான் காரணம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை