உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கார் மரத்தில் மோதி விபத்து; மாணவர்கள் 3 பேர் பலி

கார் மரத்தில் மோதி விபத்து; மாணவர்கள் 3 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி ஏற்பட்ட விபத்தில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் காரில் நேற்றிரவு சென்று கொண்டிருந்தனர். துறைமுக ரோட்டில் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மருத்துவக் கல்லூரி மாணவர்கள் முகிலன் 23,ராகுல் ஜெபஸ்டியான் 23, சாரூபன் 23, ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மாணவர்கள் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து நேற்றிரவு நிகழ்ந்துள்ளது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்