உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; பாலஸ்தீனியர்கள் 100 பேர், பிணைக்கைதிகள் 3 பேர் விடுவிப்பு

போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டம்; பாலஸ்தீனியர்கள் 100 பேர், பிணைக்கைதிகள் 3 பேர் விடுவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: பிணைக்கைதிகள் 3 பேரை ஹமாஸ் விடுவித்தது. இதற்கு, பதிலாக 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்தது.மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. போர் நிறுத்தம் ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இதுவரை 7க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.இந்நிலையில், மேலும் மூன்று பிணைக்கைதிகளை, காசாவில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் படையினர் ஒப்படைத்தனர். இதற்கு, பதிலாக 100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்தது.அவர்களின் கொடூரமான தோற்றம் இஸ்ரேலியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இஸ்ரேல் காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் போர் நிறுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் ஏராளமான பாலஸ்தீனியர்களை விடுவிக்கத் தொடங்கியது.இஸ்ரேலுக்கு வந்த பிணைக்கைதிகளை குடும்பத்தினர் கண்ணீர் மல்க ஆரத்தழுவி வரவேற்றனர்.பிரதமர் எச்சரிக்கைஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியதாவது:'பலவீனமான பிணைக்கைதிகளை பார்க்கும் போது அதிர்ச்சி அளிக்கிறது.ஹமாஸ் படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை விடுத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Sridhar
பிப் 09, 2025 13:52

இந்தியாவும் இதே தவறை செய்து கந்தஹார் விமான கடத்தல் போது மிகப்பெரிய தீவிரவாதியை விடுதலை செய்தது. அதன் விளைவு தீவிரவாத தாக்குதலால் ஆயிரக்கணக்கான உயிர் சேதம் இப்போது இஸ்ரேல் செய்வதும் அதே போன்ற ஆபத்தான செயலே ஏற்கனவே போர் நிறுத்தத்திற்கு பிறகு ஹமாஸ் தீவிரவாதிகளை பார்க்கும்போது ஒரு பாதிப்புக்கும் உள்ளானவர்கள் மாதிரி தெரியவில்லை. மேற்கொண்டு நூற்றுக்கணக்கில் விடுதலை செய்தால், தீவிரவாதம் பலமடங்கு பெருக வாய்ப்புகள் அதிகம். டிரம்ப் சொல்வதுபோல், அமெரிக்காவிடம் கொடுத்தால் அவர்கள் எல்லாரையும் "பார்த்துக்கொள்வார்கள்" என்று நினைப்பதற்கும் இடமில்லை. அவர்கள் ஆப்கானிஸ்தானில் பயந்து ஓடியது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும். இதற்க்கு இஸ்ரேலே இவ்விஷயத்தை நேரடியாக கையாண்டு மீண்டும் ஒரு முறை தீவிரவாத எண்ணம் கூட அங்குள்ள குழந்தைக்குக்கூட வராமல் இருக்க என்ன செய்யவேண்டுமோ அதை செய்யவேண்டும்.


Bahurudeen Ali Ahamed
பிப் 10, 2025 11:10

நண்பா விமான கடத்தல் செய்த தீவிரவாதிகளையும் சொந்த நாட்டை மீட்க போராடும் பாலஸ்தீனியர்களையும் எப்படி ஒப்பீடு செய்கிறீர்கள், சொந்த நாட்டிலேயே அகதிகளாக உரிமையற்றவர்களாக வாழ விருப்பமின்றி சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள் இவர்கள் எப்படி தீவிரவாதிகள் ஆவார்கள் , இவ்வளவு பேசும் நீங்கள் பாலஸ்தீன நிலத்தை திருட குழந்தைகள் மாறும் பெண்களை கொல்லும் இஸ்ரேலியர்களுக்கு ஆதரவாக எப்படி உங்களால் பதிவிடமுடிகிறது, ஆங்கிலேயனும் சில நூறு வருடங்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்தான் அவனுக்கு எதிராக காந்தி வழியிலும் நேதாஜி வழியிலும்தான் போராடி சுதந்திரம் பெற்றோம், இந்தியர்களாகிய நம்முடைய போராட்டம் சரியென்றால் பாலஸ்தீனியர்கள் போராட்டமும் சரிதான்


Laddoo
பிப் 09, 2025 12:30

ஈரான் தலைமையை ஒழித்தால் எல்லாம் சரியாகிடும்.


கிஜன்
பிப் 09, 2025 08:21

"Clean the whole திங்" .... டிரம்ப் சொல்லிவிட்டார் .... நெதன்யாகு செய்யப்போகிறார் ... சும்மா இருந்தவர்களை சுரண்டினால் இப்படித்தான் நடக்கும் .... இது திருப்பரங்குன்றத்திற்கும் பொருந்தும் ...


VENKATASUBRAMANIAN
பிப் 09, 2025 07:44

இங்கே ஹமாஸீக்கு ஆதரவாக உள்ளவர்களை ஹமாஸீக்கு அனுப்பவேண்டும். அங்கே போய் பேசட்டும்.


Bahurudeen Ali Ahamed
பிப் 09, 2025 13:50

சகோதரா எல்லோரும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக சொந்த நிலங்களில் சொந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாகத்தான் பதிவிடுகிறார்கள், பாலஸ்தீன நிலங்களை திருடுவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலுக்கு ஆட்கள் பாற்றாகுறையாம், இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் நீங்கள் இஸ்ரேல் செல்லலாமே


Kasimani Baskaran
பிப் 09, 2025 07:20

சுற்றி இருக்கும் தீவிரவாத ஆதரவு நாடுகளின் தூண்டுதலில் இயங்கும் ஹமாஸ் பாலத்தீனியர்களை ஒருபொழுதும் நிம்மதியாக இருக்கவிடாது. இரும்புக்கரம் கொண்டு ஆளப்பட்ட வேண்டியவர்களை ஜனநாயக நெறிகளின் அடிப்படையில் ஒரு பொழுதும் ஆட்சி செய்து விட முடியாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை