மேலும் செய்திகள்
அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் நாசாவையும் விட்டு வைக்கவில்லை
10 hour(s) ago
போராட்டங்களால் மூடப்பட்ட பிரான்ஸ் ஈபிள் டவர்
10 hour(s) ago
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ்
10 hour(s) ago
கொழும்பு: இலங்கையில் ரூ.2 ஆயிரத்து 270 கோடி செலவில்பெரிய துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. கடந்த வாரம் சீனாவுக்கு அதிபர் மகிந்த ராஜபக்ஷே சென்றுவந்தார். அப்போது இலங்கை -சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் இலங்கையில் துறைமுகத்தின் 55 சதவீத பங்குகள் சீனாவின் சீனா மெர்ச்சண்ட் ஹோல்டிங்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், 30 சதவீத பங்குகள் இலங்கையின் அய்ட்கென் ஸ்பென்ஸ் ஹோல்டிங் நிறுவனம், 15 சதவீத பங்குகள் இலங்கை துறைமுக ஆணையத்திடமும் இருக்கும். இந்நிலையில் ரூ. 2 ஆயிரத்து 270 கோடியில் பெரிய அளவிலான துறைமுகம் அமைக்கப்படும் இந்த துறைமுகம் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும். துறைமுகத்தில் முதல் கட்டப்பணிகள் 2013-ல் நிறைவடையும். ஏற்கெனவே சீனா ரூ.6,810 கோடி முதலீட்டில் ராஜபக்ஷேயின்ன் தொகுதியான அம்பனத்தோட்டத்தில் மிகப்பெரிய அளவிலான துறைமுகத்தை கட்டி வருகிறது. சீனாவைச் சேர்ந்த மிகப்பெரிய நிறுவனங்களான சீனா ஹார்பர், சினோ ஹைட்ரோ ஆகியவை இந்த கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன .வெளிநாட்டு நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்ய வசதியாக தனது வெளியுறவுக் கொள்கையை இலங்கை தளர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான அறிவிப்பினை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
10 hour(s) ago
10 hour(s) ago
10 hour(s) ago