மேலும் செய்திகள்
எத்தியோப்பியா சர்ச்சில் சாரம் விழுந்து 36 பேர் பலி
12 hour(s) ago
துருக்கியில் நிலநடுக்கம்
12 hour(s) ago
ஆப்கன் அமைச்சர் இந்தியா வர ஐ.நா., கவுன்சில் அனுமதி
16 hour(s) ago
பீய்ஜிங்: பாகிஸ்தானுக்காக சீனா முதன்முறையாக தொலைதொடர்பு செயற்கை கோளினை தயாரித்து விண்ணி்ல் செலுத்தவுள்ளது. பாகி்ஸ்தான்- சீனா இடையே இருதரப்பு பரஸ்பரம் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் விண்வெளித்துறையில் உதவ சீனா முன்வந்துள்ளது. இதன்படி பாக்சாட்- 1 ஆர் என்ற தொலை தொடர்பு செயற்கை கோளினை சீனா பாகிஸ்தானுக்காக வடிவமைத்துள்ளது. 3-பி டிரான்ஸ்பான்டர்கள் கொண்ட இந்த செயற்கை கோள், காலநிலை மாற்றம் அறிந்து கொள்ளுதல், உயர் அழுத்த தொலை தொடர்புகள், ராணுவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயன்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கை கோள் சீனாவின் தென்மேற்கு பகுதியில் ஜிசாங் செயற்கை கோள் ஏவு மையத்திலிருந்து விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. முன்னதாக கடந்த 2007-ம் ஆண்டு சீனா- பாகிஸ்தான் இடையே விண்வெளி திட்டம் குறித்து ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது குறித்து சீனாவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத்கான் பீய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாக்சாட்-1பிஆர் சாட்டிலைட் மூலம் சீனா-பாகிஸ்தான், விண்வெளி மற்றும் அறிவியல் துறையிலான உறவு மேன்மேலும் வலுப்பெற்றுள்ளது என்றார்.
12 hour(s) ago
12 hour(s) ago
16 hour(s) ago