உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு நேரடி விமான சேவை: பேச்சு நடப்பதாக சீனா தகவல்

இந்தியாவுக்கு நேரடி விமான சேவை: பேச்சு நடப்பதாக சீனா தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங் : இந்தியாவுக்கு நேரடி விமான சேவையை மீண்டும் துவக்குவது தொடர்பாக பேச்சு நடந்து வருவதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறினார்.இந்தியா - சீனா இடையே இயக்கப்பட்டு வந்த நேரடி விமான சேவை கொரோனா தொற்று பரவிய 2020ல் நிறுத்தப்பட்டது. அதன் பின் அதே ஆண்டில் லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது.இதனால் விமான சேவை நிறுத்தம் நீட்டிக்கப்பட்டது. தற்போது சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகள் வழியாக இணைப்பு விமானங்கள் மூலம் இரு நாட்டவர்களும் பயணிக்கின்றனர்.இது நேரம் மற்றும் பண விரயத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில், ஷாங்காய்க்கான இந்திய துாதர் பிரதிக் மாத்தூர், 'சீன ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' நிறுவன அதிகாரிகளை சமீபத்தில் சந்தித்து பேச்சு நடத்தினார்.இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்தியாவுடன் நேரடி விமான சேவையை மீண்டும் துவக்குவது குறித்து சீனா தரப்பிலும் பேச்சு நடத்தப்படுகிறது. முன்கூட்டியே இதில் முடிவு எட்டப்படலாம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக உள்ளது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

அப்பாவி
ஆக 15, 2025 16:50

வேலைக்கு ஆள் வேணுமா? h1 visas குடுப்பீங்களா?


தாமரை மலர்கிறது
ஆக 14, 2025 22:50

வேகமாக வளரும் சீனாவுடன் நட்புறவு மலர்வது பாராட்டத்தக்கது. சீனாவை போன்று வளர, ஒரு பார்ட்டி ஆட்சி தான் இந்தியாவில் வேண்டும். எதிர்க்கட்சிகள் தேசத்தின் இலட்சியத்தை திசைதிருப்புகின்றன.


Ramesh Sargam
ஆக 14, 2025 22:42

இரு நாட்டு மக்களுக்கு நல்ல செய்தி. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு இது நல்ல செய்தியா? ஒருவேளை இல்லை என்றால், அவர் மீண்டும் இந்தியா, சீனா மீது வரியை அதிகம் ஏற்றுவார்.


SANKAR
ஆக 14, 2025 22:41

midway stop at Galwan airport?


vivek
ஆக 15, 2025 09:21

you stop at tasmac along with your family....stupid


புதிய வீடியோ