உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தைவானுக்கு வக்காலத்து வாங்கும் ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

தைவானுக்கு வக்காலத்து வாங்கும் ஜப்பானுக்கு சீனா எச்சரிக்கை

தைபே: ''சீனா - தைவான் இடையேயான விவகாரத்தில், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் கருத்துக்கள் எல்லையை மீறி விட்டன,'' என, சீனா வெளியுறவு அமைச்சர் வாங் யி கண்டனம் தெரிவித்துள்ளார். நம் அண்டை நாடான சீனா, அதன் அருகே உள்ள தைவான் நாட்டை சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக பிரச்னை உள்ளது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு ஜப்பான் ஆதரவுக்கரம் நீட்டி உள்ளது. 'தைவா ன் மீது சீனா ராணுவ நடவடிக்கை எடுத்தால், ஜப்பான் பதிலடி கொடுக்க வேண்டியிருக்கும்' என, அந்நாட்டின் பிரதமர் சனே தகாய்ச்சி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து, சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி நேற்று கூறியதாவது: ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சியின் கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. தைவான் விவகாரத்தில் அந்நாட்டின் தலைவர்கள் தவறான செய்தியை பரப்புகின்றனர். அவர்கள் பேசக்கூடாததைப் பேசியதுடன், மீறக்கூடாத எல்லையை மீறிவிட்டனர். ஜப்பானின் நடவடிக்கைகளுக்கு சீனா உறுதியாக பதிலளிக்கும். அந்நாட்டின் ராணுவவாதம் மீண்டும் வலுப்பெறுவதை தடுக்க அனைத்து நாடுகளுக்கும் கடமை உண்டு. இவ்வாறு அவர் கூறினார். இதனால், ஜப்பான் - சீனா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இதற்கிடையே, ஐ.நா., பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெசுக்கு சீனா எழுதிய கடிதத்தில், 'தைவான் விவகாரத்தில் ஜப்பான் ராணுவத் தலையீட்டுக்கு துணிந்தால், அது ஆக்கிரமிப்பாக கருதப்படும். ஐ.நா., சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கீழ், சீனா தன் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தி, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும்' என, குறிப்பிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை