உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாயாஜால கார் ; மந்திரம் போட்டாலும் நிற்காது; அமெரிக்காவில் ஸ்டாலின் ஏன் பயணித்தார் ?

மாயாஜால கார் ; மந்திரம் போட்டாலும் நிற்காது; அமெரிக்காவில் ஸ்டாலின் ஏன் பயணித்தார் ?

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் காரில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து பயணம் செய்த வீடியோ இணையதளத்தில் ராக்கெட் வேகத்தில் வைரலாகி வருகிறது. இந்த கார் சேவையை ஆப்-ல் புக் செய்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, 17 நாட்கள் அரசு முறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின், அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு முதலீட்டாளர்களை சந்தித்து ஸ்டாலின் அழைப்பு விடுத்து வருகிறார். ஏராளமான நிறுவனங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன. சான்பிரான்சிஸ்கோவில் நடந்த அமெரிக்க வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற முதல்வர் ஸ்டாலின், ஜாகுவார் நிறுவனத்தின் டிரைவர் இல்லாத தானியாங்கி காரில் பயணம் செய்தார். டிரைவர் இல்லாத ஆட்டோமேட்டிக் காரில் முதல்வர் ஸ்டாலின் அமர்ந்து பயணம் செய்த வீடியோ இணையதளத்தில் ராக்கெட் வேகத்தில் வைரலாகி வருகிறது.

இனி வரும் உலகம்

அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் , 'இன்று உலகத்தின் வேறுபல பாகங்களில் உள்ளவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பல அற்புதங்களும் அப்பாகங்கள் அடைந்துள்ள முற்போக்குகளும் முதலாகியவை எல்லாம் அந்நாட்டவர்கள், பழையவற்றோடு திருப்தி அடைந்து அதுவே முடிவான பூரண உலகம் என்று கருதி அப்பழையவற்றையே தேடிக்கொண்டு திரியாமல், புதியவற்றில் ஆர்வங்கொண்டு, நடுநிலைமை அறிவோடு, முயற்சித்ததின் பலனாலேயே ஏற்பட்டவை.இனி வரும் உலகம்!' என பதிவிட்டு இருந்தார். முதல்வர் ஸ்டாலின் பயணித்த தானியங்கி கார் குறித்து சுவாரஸ்யமான விஷயங்கள் பின்வருமாறு:* டிரைவர் இல்லாத காரை ஜாக்குவார் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த காரை மக்களும் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் புக் செய்து டாக்ஸி போல பயன்படுத்தி கொள்ளலாம்.* இந்த காரை பயன்படுத்த ஆப்-ல் புக் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்திற்கு வந்துவிடும்.* காரில் ஏறி அமர்ந்து உடன், நீங்கள் செல்ல வேண்டி இடத்திற்கான முகவரியை கிளிக் செய்ய வேண்டும். நீங்கள் செல்ல வேண்டிய இடத்தில், கார் தானாக சென்று விடும்.* அமெரிக்காவில் குறிப்பிட்ட பகுதிகளில், மட்டும் இந்த கார் பயன்பாட்டில் இருக்கிறது. காரில் 29 கேமராக்கள், ரேடார், லைடார் உள்ளிட்ட கருவிகள் உள்ளன.* இந்த கருவிகள், கார் சாலையில் செல்லும் போது தானியங்கி முறையில் எந்த வாகனத்தின் மீதும் மோதாமல் செல்ல பொருத்தப்பட்டுள்ளன.* இந்த காரை தற்போது யாரும் சொந்தமாக வாங்க முடியாது. வேமோ நிறுவனம் இந்த காரை டாக்ஸி பயன்பாட்டிற்காக சொந்த நிறுவனம் மூலம் நடத்தி வருகிறது.ஆள் இல்லாமல் காரில் மன அமைதியுடன், நிம்மதியாக செல்ல விரும்புவோர் இந்த கார் சேவையை அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த கார் சேவை பற்றி அமெரிக்காவில் தெரியாத மக்களே கிடையாது. டிரைவர் இல்லாத கார் மக்கள் மத்தியில் கெத்தாக இடம் பிடித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

நாநி
செப் 04, 2024 05:53

நாட்டுக்கு ரொம்ப முக்கியம் குடும்பமாக ஊர்சுத்தி மக்கள் வரிபணம் பாழடிக்கப்படுகிறது??


Matt P
செப் 03, 2024 22:39

சுந்தர் பிச்சையை பார்த்து விட்டு தான் வருவேன் என்று சபதம் போட்டு விட்டு போனார் . இன்னும் பார்க்க முடியலை போலிருக்கு. .டாடா மோட்டார் கம்பெனி தான் தற்போது ஜாகுவார் காரின் உரிமையை வைத்திருப்போது போல் தெரிகிறது. வூர் காருக்கு உட்கார வாய்ப்பு கொடுத்திருக்காங்க.


இராம தாசன்
செப் 03, 2024 20:30

அமெரிக்கா சென்று திரை படம் பார்த்து விமர்சனம் செய்கிறார் / காருக்கு விளம்பரம் செய்கிறார் .. இன்னும் என்ன என்ன செய்ய போகிறாரோ


இராம தாசன்
செப் 03, 2024 20:28

இந்த மாதிரி கோவையில் உபயோகத்தில் உள்ளது என்ற செய்தி முன்பே வந்தது. இப்போது எதற்கு இந்த விளம்பரம் - குடும்ப வியாபாரத்திற்கு இருக்குமோ?


Raja
செப் 03, 2024 17:46

ஜப்பானில் 10 நாட்கள், ஸ்பெயினில் 15 நாட்கள், அமெரிக்காவில் 17 நாட்கள் என நீண்ட நாள் சுற்றுப்பயணம் செய்யும் முதலவர் என்ற பெருமையை பெறுகிறார் ஸ்டாலின, வாழ்த்துக்கள். தமிழகத்தில் பசி பஞ்சம் இல்லாத நிலையை எட்டி வாடா இந்தியர்களுக்கே சோறு போடும் நிலைமையில் உள்ளோம், தமிழக அரசு மருத்துவமனைகள் உலக தரத்துடன் மேல்நாட்டவரே மருத்துவ சுற்றுலா செய்யும் அளவிற்கு தரம் உயர்த்தி உள்ளோம், தமிழக அரசு பேருந்துகள் ஆட்டோமெட்டிக்காக இயங்கும் அளவிற்கு உலக தரத்துடன் காலத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டே வந்து இன்று நம் பேருந்துகள் ஜப்பான் பேரூந்துகளுடன் போட்டியிடுகின்றன. இவ்வளவும் செய்து சாதனை படைத்துள்ள முதல்வர் அமெரிக்க ஜப்பான் ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஓய்வு அவசியம் எடுக்க வேண்டும். என்னடா சத்தம் அங்கே, பழைய ஓய்வு ஊதியம்மா, உனக்கு ஊதியமே கிடையாது


Shekar
செப் 03, 2024 17:24

அனுபவி ராஜா அனுபவி


D.Ambujavalli
செப் 03, 2024 16:59

மூளை, திறமை இருப்பவர்களை இங்கு வாழ விடுவார்களா என்ன? பின், இங்கும் அப்படிப் பட்ட கார் எப்படி வரும்? உள்ளூரிலேயே சீட் பெல்ட் இல்லாமல் வண்டி ஓட்டக்கூடாது என்பது டிராபிக் விதி இவர் என்றைக்கு முன் சீட்டில் பயணித்திருக்கிறார், இதெல்லாம் தெரிய ? இவ்வளவு நீ …….. ண்ட x பதிவு பிழையில்லாமல், - இலக்கிய மொழியில் - இவர் எழுதினாரா ? நம்புவோமாக


Dharmavaan
செப் 03, 2024 16:05

தினமலர் மற்ற தமிழக டிவி போல.தன மரியாதையை கெடுத்துக்கொள்கிறது ....திமுக ஜால்றா மலராகி விட்டது


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 03, 2024 16:55

எமோஷனல் இன்டெலிஜென்ஸ் பற்றி படித்ததுண்டா ????


V Venkatachalam
செப் 03, 2024 16:04

ஏராளமான ஒப்பந்தங்கள் போடபடுகின்றன என்று சொல்கிறது. ஏராளமான என்றால் 1 லட்சம் ஒப்பந்தங்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா ? ஏராளமான என்பது திருட்டு திமுக பாஷை ஆயிற்றே . எதோ அமெரிக்க போனதற்கு புருடா மேல் புருடா அவ்வளவுதான்.


ஆரூர் ரங்
செப் 03, 2024 15:41

இவ்வளவு பெரிய மெசேஜை இவரே எழுதினாரா? வாசிக்கவும் தெரியுமா? அறிவுஜீவி முதல்வர்


V RAMASWAMY
செப் 03, 2024 16:15

கோடிக்கணக்கில் செலவு செய்துகொண்டு மனைவியுடன் அமெரிக்க நாட்டிற்கு சென்று கோடிகணக்கில் முதலீட்டை அள்ளிக்கொண்டு வரப்போகிற முதல்வருக்கு இப்படி எழுதிக்கொடுக்க ஆட்களா இல்லை ?.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை