உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு

இந்தியா - சீனா இடையே மீண்டும் மோதல் வெடிக்கலாம்; பென்டகன் கணிப்பு

வாஷிங்டன்: அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் என்று அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த பெமா வாங்ஜாம் தாங்டாக் என்பவர், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் வசித்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 21ம் தேதி ஜப்பானுக்கு செல்லும் வழியில் சீனாவில் அவர் சென்ற விமானம் ஓய்வுக்காக நிறுத்தப்பட்டது. அப்போது, அவரது பாஸ்போர்ட்டை பறித்த சீன குடியேற்ற அதிகாரிகள், அருணாச்சல பிரதேசத்தில் பிறந்ததால் பாஸ்போர்ட் செல்லாது என்றனர். மேலும், அருணாச்சல பிரதேசம் சீனாவைச் சேர்ந்த பகுதி என்றும் கூறினர். இதற்கு இந்திய தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.இந்த நிலையில், அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்காவின் பென்டகன் தெரிவித்துள்ளது.இது குறித்து அமெரிக்க காங்கிரஸிடம் பென்டகன் சமர்பித்த அறிக்கை; 2049ம் ஆண்டுக்குள் சிறந்த நிலையை அடைய அருணாச்சலப் பிரதேசம், தைவான் மற்றும் தென் சீனக் கடலில் உள்ள பிற பிராந்தியங்கள் மிகவும் முக்கியம் என்று சீனா முடிவு செய்துள்ளது. இதற்காக ஒரு சர்வதேச உயர்மட்டக் குழுவையும், பலமான ராணுவ கட்டமைப்பை உருவாக்குவதை சீனா நோக்கமாக கொண்டிருக்கிறது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பதட்டத்தை தணிப்பது என்பது சீனாவின் நீண்டகால இரட்டை உத்தியின் ஒரு பகுதி. சீனா அதன் நட்புநாடான பாகிஸ்தானைப் போல, ராணுவத்தின் மூலம் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கும். எனவே, இனி வரும் ஆண்டுகளில் இந்தியா - சீனா இடையிலான உறவில் மோதல் ஏற்படலாம், என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Murthy
டிச 25, 2025 16:07

அமெரிக்காவிற்கு இந்த மோதல் பிடிக்கும் ....


Anand
டிச 25, 2025 15:39

எல்லா நாடுகளையும் உக்ரைனை போலவே எண்ணி உபதேசம் செய்ய வேண்டாம், சீனாவை எப்படி கையாள்வது என மோடி அரசுக்கு தெரியும். முதலில் நீ உன்னோட நேட்டோ நாடுகளுக்குள்ளேயே வெடிக்கப்போகும் மோதலை எப்படி தடுப்பது என பார்.


cpv s
டிச 25, 2025 15:17

america wantto start fight india and china so the america scrwing both country,


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை