உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது: சுந்தர்பிச்சை மகிழ்ச்சி

புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது: சுந்தர்பிச்சை மகிழ்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: '' அமெரிக்காவின் தொழில்நுட்ப திறனை வடிவமைத்ததில் புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு அற்புதமானது,'' என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சிஇஓ சுந்தர்பிச்சை கூறியுள்ளார்.அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு எச்1பி விசாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார். இந்த விசாக்கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி அறிவித்தார். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது புதிதாக விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே அது பொருந்தும் என வெள்ளை மாளிகை விளக்கமளித்துள்ளது.இந்நிலையில் சுந்தர்பிச்சை அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: அமெரிக்க தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்தால், புலம்பெயர்ந்தவர்களின் பங்களிப்பு என்பது அற்புதமானது. இன்னும் திறமைசாலிகளை கொண்டு வரக்கூடிய கட்டமைப்பு கொண்டு வரப்படுவதாக நினைக்கிறேன். தற்போதைய திட்டங்களில் உள்ள சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மாற்றங்கள் செய்யப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 20, 2025 00:22

சிலநாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபரே, அமெரிக்கர்களுக்கு பயிற்சி கொடுக்க இந்தியா போன்ற நாடுகளிலிருந்து திறமையானவர்கள் வந்து, பயிற்சி கொடுத்துவிட்டு திரும்புங்கள் என்று கூறியிருந்தார். அவரே ஒப்புக்கொண்டுள்ளார் அமெரிக்கர்களுக்கு திறமை இல்லை என்று. அமெரிக்காவின் இன்றைய வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமே அங்கு குடியேறியுள்ள புலம்பெயர்ந்தவர்கள்தான். என்னைக்கேட்டால் சுந்தர் பிச்சை, சத்ய நாடெல்லா போன்ற இந்திய அறிவாளிகளும் இந்தியா திரும்பி, இந்தியாவில் தொழில் தொடங்கி, இந்தியாவை மேலும் மேம்படுத்தவேண்டும். அமரிக்கா வேண்டுமென்றால் இந்தியா வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை