உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அரசுக்கு எதிராக விமர்சனம்... அண்ணனுக்கு 30 ஆண்டு... தம்பிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

அரசுக்கு எதிராக விமர்சனம்... அண்ணனுக்கு 30 ஆண்டு... தம்பிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: சவுதி அரேபிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.முகமது அல் காம்தி,50, என்பவர் சவுதி அரேபியாவில் ஓய்வு பெற்ற ஆசிரியராவார். இவர், வெறும் 9 பாலோயர்களைக் கொண்ட தனது எக்ஸ் தளப் பக்கத்தில், அரசுக்கு எதிராகவும், தீவிரவாத கொள்கைகளுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டு வந்தார். இதனடிப்படையில், கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.அதன்பிறகு, சரியாக ஒரு வருடத்தில் காம்திக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை விசாரித்த கோர்ட், கடந்த ஆகஸ்ட் மாதம், தூக்கு தண்டனையை ரத்து செய்தது. இந்த நிலையில், ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி கோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதே வழக்கில் அவரது சகோதர் ஆஸாத் அல் காம்திக்கு,47, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Nandakumar Naidu.
செப் 26, 2024 10:11

நம் நாட்டிலும் மத சார்பற்ற என்ற வார்த்தையை தூக்கி குப்பையில் போட்டு விட்டு தேச, சமூக விரோதிகளை இப்படித்தான் தண்டிக்க வேண்டும்.


பேசும் தமிழன்
செப் 25, 2024 21:27

இதே போன்ற சட்டம் நம் நாட்டிலும் தேவை.... தமிழ் நாட்டில் கண்ட கண்டவர்கள்... நாட்டின் பிரதமரை தவறாக பேசி வருகிறார்கள்.


prabhu
செப் 25, 2024 21:01

ஒரு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் தீமுக மட்டும் அதிமுக மட்டும் இல்லை பிஜேபி காரனும் இருக்க மாட்டான்


Barakat Ali
செப் 25, 2024 19:29

அழகிரியின் மகன் டிஸ்சார்ஜ் ஆகி வந்துள்ளார் ..... அவர் உதயநிதியை விமர்சிப்பாரா ????


Iniyan
செப் 25, 2024 19:21

இந்த மாதிரி தண்டனை இந்தியாவில் கொடுத்தால் ஒரு காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுக காரனும் இருக்க மாட்டான்.


VENKATASUBRAMANIAN
செப் 25, 2024 19:03

ராகுலுக்கு என்ன தண்டனை. காங்கிரஸ் கட்சி சொல்லட்டும்


தாமரை மலர்கிறது
செப் 25, 2024 19:00

மிக அருமையான தீர்ப்பு. இந்தியாவிலும் சமூகவலைத்தளங்களில் மத்திய அரசை எதிர்த்து பேசுபவர்களுக்கு இந்த மாதிரி தண்டனை தான் பொய்ச்செய்திகளை தடுக்கும். வேண்டுமென்றே பணம் சம்பாரிப்பதற்காக, பலர் வதந்திகளை ஊடகங்களில் பரப்பி மத்திய அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்தி வருகிறார்கள். முதலில் நடிகைகளின் மீது பொய்ச்செய்திகளை பரப்பி பணம் சம்பாரித்து வந்தார்கள். தற்போது அரசின் மீதே தாக்குதலை தொடங்கிவிட்டார்கள். தீவிரவாதிகளை நல்லவர்களாக சித்தரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


KRISHNAN R
செப் 25, 2024 18:55

இங்கு இருந்து.. மற்றவர்களையும்,,,நம் நாட்டையும் கண்டபடி பேசி, எழுதி... வரும் பலர் இதை நினைக்க வேண்டும்


கோவிந்தராசு
செப் 25, 2024 18:30

எனது தாய் திரு நாட்டிலும் இது போல வேணும்


sankaranarayanan
செப் 25, 2024 18:25

அரசுக்கு எதிராக வெளிநாடு சென்று மிக மிக மட்டமான கருத்து தெரிவித்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பப்புவை என்ன செய்ய போகிறார்கள்.நீதிமன்றமும் இன்னமும் வாயைதிறக்கவே இல்லையே.யார்தான் பப்புவின் துரோக செயலுக்கு மணி கட்டுவார்கள்.


ஆரூர் ரங்
செப் 25, 2024 21:34

பப்புவ உள்ளே போட்டால் உடனிருக்கும் மற்ற கைதிகளுக்கும் மனநோய் வந்துவிடும். இட்லிக்கு நாடுகடத்துவதே பெஸ்ட்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை