உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்த சட்டத்தை இங்கேயும் கொண்டு வாங்க ஆபீசர்: வடகொரியாவில் கடமையை செய்யாட்டி மரண தண்டனையாம்!

இந்த சட்டத்தை இங்கேயும் கொண்டு வாங்க ஆபீசர்: வடகொரியாவில் கடமையை செய்யாட்டி மரண தண்டனையாம்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சியோல்: வட கொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல், கடமை தவறிய குற்றத்திற்காக 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.கிழக்கு ஆசிய நாடான வட கொரியாவை கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறது. பல்வேறு மர்மங்களை கொண்டதாக அந்நாடு உள்ளது. அங்கு நடக்கும் விஷயங்கள் வெளியில் தெரிவதில்லை. கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை சோதனை செய்து தென் கொரியா மற்றும் ஜப்பானை அச்சுறுத்தி வருகிறார். உலக நாடுகளின் மிரட்டலை அவர் கண்டு கொள்வதில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m8a0mofp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கடந்த ஜூலை மாதம் பலத்த மழை காரணமாக அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டதுடன், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதனால், 4 ஆயிரம் வீடுகள் சேதமடைந்தன.15 ஆயிரம் பேர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்தனர். அயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை அந்நாட்டு அதிகாரிகள் மறுத்து உள்ளனர். பாதிக்கப்பட்ட இடங்களை அதிபர் கிம் ஜாங் உன் நேரில் பார்வையிட்டார்.இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர். அவர்கள் கடமையை சரியாக செய்யாததால், பேரிழப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்கள் ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்படி கிம்ஜாங் உன் உத்தரவிட்டார். இதனையடுத்து, உயர் அதிகாரிகள் உட்பட 30 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த தண்டனை கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டாலும், அது குறித்த தகவல் தற்போது தான் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

என்றும் இந்தியன்
செப் 10, 2024 17:09

அப்படின்னா முதலில் அவனுக்குத்தான் தரவேண்டும் கடமை தவறியதில். இந்தியாவில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டால் எல்லா அரசியல்வாதிகளுக்கும் இது கிடைத்து இந்தியாவில் ஒரு அரசியல்வியாதி இருக்காது உயிரோடு.


God yes Godyes
செப் 10, 2024 13:03

கடமைன்னா அது என்ன கடமை. அங்கு எவனாவது சும்மா இருந்தாலே கடமை செய்யவில்லை என்பார்கள்.


தாமரை மலர்கிறது
செப் 04, 2024 21:05

முப்பது பேரின் அலட்சியத்தால், ஆயிரம் பேர் இருந்துள்ளார்கள். அதனால் தூக்கு தண்டனை கொடுப்பதில் தவறில்லை. அதே போன்று ஊழல் செய்யும் திமுக மற்றும் கெஜ்ரிவால் போன்ற அரசியல்வாதிகளால் நிர்வாகம் சீர்கெட்டு போய் உள்ளது. ஊழல் எங்கும் உள்ளது. அதனால் இங்கேயும் அதே போன்று ஒரு சட்டத்தை இயற்றி தூக்கு தண்டனை கொண்டுவருவது நல்லது.


Ramesh Sargam
செப் 04, 2024 21:01

இந்த ஒரு செயலுக்காக நான் வடகொரியா அதிபரை பாராட்டுகிறேன்.


ramesh
செப் 04, 2024 19:26

வட கொரியா வில் நியாயம் இருக்காது .ஆனால் இந்தியாவில் உண்மையில் தங்கள் கடமையை செய்யாமல் லஞ்சத்துக்கு அலையும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகள் மீதும் கடும் நடவடிக்கை தேவை. மரண தண்டனையை விட இருபத்து ஐந்து ஆண்டுகள் யாரையும் சந்திக்க விடாமல் தனிமை சிறையில் அடைக்கலாம் .இது மரண தண்டனையை விட கொடூரமானது


Ramesh Sargam
செப் 04, 2024 18:51

இந்த தண்டனையை இந்தியாவில் அமுல்படுத்தவேண்டும் என்று நண்பர் ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார். அப்படி அமுல்படுத்தினால், முதலில் மரணதண்டனை பெறுவது அமுல்படுத்துபவர்களே, ஆதாவது ஆட்சியில் அதிகாரத்தில் உள்ளவர்களே... அப்படி இருக்கையில் இது இந்தியாவில் சாத்தியமில்லை. வடகொரியாவில் ஒரு யோகி ஆதித்தியநாத். சபாஷ்...


சமூக நல விரும்பி
செப் 04, 2024 15:55

இந்த தண்டனை இந்தியாவில் உடனே அமுல் படுத்துவது மிகவும் அவசரம்


ayen
செப் 04, 2024 13:33

இந்தியாவில் இது சாத்தியமற்றது. காரணம் குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தினால் பல நீதிபதிகள் ஜாமின் மறுத்த நிலையில் ஜந்தாவது நிதிபதி ஏதோ ஒரு காரணம் கூறி அவரை ஜாமினில் விடுவிக்கப்படுகிறார்.


Rengaraj
செப் 04, 2024 13:12

நாட்டில் நடக்கும் பெருவாரியான குற்றங்களுக்கு அடிப்படை போதை, மற்றும் பாலியல் வக்கிரங்கள். இவற்றில் தயவு தாட்சணியம் பார்க்கக்கூடாது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மனித உரிமை கமிஷன் வக்காலத்து வாங்கக்கூடாது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் கிடையாது என்றிருக்க வேண்டும். ஒரே நீதிமன்றம் அதுதான் இறுதியான தீர்ப்பு, அப்பீல் கிடையாது என்று இருக்க வேண்டும். அரசு தரப்பிலும் குற்றவாளிகள் தரப்பிலும் பெண் வக்கீல்கள் மட்டுமே ஆஜராகவேண்டும். நீதிபதியாக பெண்களே அந்த வழக்குகளுக்கு இருக்க வேண்டும். குற்றம் நடந்தது தெரியவந்த நாளில் இருந்து இருபது நாட்களுக்குள் ,பாலியல் குற்றமாக இருந்தால் ஆயுள் தண்டனையும், பாலியல் கொலைக்குற்றமாக இருந்தால் மரணதண்டனையும் விதிக்குமாறு சட்டத்தை திருத்தி எழுதினால் பாதிக்குற்றங்கள் நாட்டில் குறைந்துவிடும். நீதிவிசாரணை முறையில் பெரும் மாற்றங்கள் தேவை. ஆரம்பத்தில் இந்த சட்டதிருத்தத்துக்கு கடும் எதிர்ப்புகள் வரத்தான் செய்யும். எப்படி தேசம் என்று வரும்போது நாட்டை முன்னிறுத்துகிறோமோ அதை போன்று பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் போது பெண்களின் சட்டரீதியான அடிப்படை உரிமையை முன்னிறுத்தவேண்டும்.


சமீபத்திய செய்தி