உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டைமண்ட் லீக்: தங்கத்தை தவற விட்ட நீரஜ் சோப்ரா

டைமண்ட் லீக்: தங்கத்தை தவற விட்ட நீரஜ் சோப்ரா

லாசேன்: லாசேன் 'டைமண்ட் லீக்' தொடரில் 'ஹாட்ரிக்' தங்கம் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்ட்ட இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 2வது இடம் பிடித்து ஏமாற்றம் அளித்தார்.இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா(26). டோக்கியோ (தங்கம்), பாரிஸ் (வெள்ளி) என அடுத்தடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றார். தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட போதும், தொடர்ந்து போட்டியில் பங்கேற்று வருகிறார். சுவிட்சர்லாந்தின் லாசேனில் நடந்த டைமண்ட் லீக் தடகளத்தில் பங்கேற்ற அவர், தனது கடைசி முயற்சியில் அதிகபட்சமாக 89.49 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, 2வது இடம் பிடித்தார். இது இந்த சீசனில் அவரது சிறந்த சாதனை.பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ், 90.61 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார். ஜெர்மனியின் ஜூலியன் வெப்பர் (87.08 மீ.,) 3வது இடம் பிடித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை