உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்; ஈரான் அறிவிப்பால் பதற்றம்

இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல்; ஈரான் அறிவிப்பால் பதற்றம்

தெஹ்ரான்: ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலைக்கு பழிக்கு பழி தீர்க்க இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் அரசு உத்தரவு; இதனால் உலக நாடுகளிடையே உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நீடித்து வருகிறது. இதுவரை 39 ஆயிரத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தற்போது ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நேரடி மோதல் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டின் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வந்த ஹமாஸ் அமைப்பின் இஸ்மாயில் ஹனியே தெஹ்ரானில் கொல்லப்பட்டார்.

நேரடி தாக்குதல்

இந்த படுகொலைக்கு பழிக்குப் பழி தீர்க்க இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி உத்தரவிட்டுள்ளார். அவர்,'' இஸ்மாயில் ஹனியே எங்களுடைய விருந்தாளி. அவரை இஸ்ரேல் கொன்றுவிட்டது. இஸ்ரேலை பழிவாங்குவதை நாங்கள் எங்கள் கடமையாகக் கருதுகிறோம் என்றார்.ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே உயிரிழப்புக்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இஸ்ரேல் மவுனம் காத்து வருகிறது. ஈரான் நேரடி தாக்குதலில் ஈடுபடும் என்ற அச்சத்தால், மத்தியக் கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Duruvesan
ஆக 01, 2024 17:04

ஷியா ஒழியட்டும் என சன்னி அமைதி, எப்படியோ ஒரு மூர்க்க தேசம் ஒழிய எல்லாம் வல்ல அல்லாஹு வழி செய்ய வேண்டுகிறேன்


K.Muthuraj
ஆக 01, 2024 15:36

ஹனியே மனைவி மற்றும் பிள்ளைகள் பாதிப்பேர் மொத்தம் 13 இஸ்ரேலில் வளர்ந்தார்கள். அல்லது இஸ்ரேலில் உள்ள மருத்துவமனைகளில் காப்பாற்றப்பட்டவர்கள். இதிலே கொடுமை என்னவென்றால் ஈரானில் இன்றைய ஹனியே இறுதி ஊர்வலத்தில் ஈரானியர்கள் டெத் டு அமெரிக்கா, டெத் டு இஸ்ரேல் என்று கோஷமிட்டார்கள். இவர்கள் சிறிதும் mature ஆகவில்லை என்று தோன்றுகின்றது. இதுவே முதலில் வருபவருக்கு அமெரிக்கா விசா என்றால் மொத்த இரானியர்களும் வரிசையில் நிற்பார்கள் என்பதே உண்மை.


தமிழ்வேள்
ஆக 01, 2024 15:20

கூடிய விரைவில் அமைதி மார்க்கம் , [மயான] அமைதியாகிவிடும் போல இருக்கிறது ..சீக்கிரம் நல்லது நடக்கட்டும் ..


ராமகிருஷ்ணன்
ஆக 01, 2024 14:31

புதிய அதிபர் பதவி ஏற்பு விழா நடந்த இடத்தில் குண்டு போட்டிருந்தா இந்த செய்தி வந்திருக்காது. இஸ்ரேல் தவறான இடத்தில் குண்டு போட்டி ருக்கு.


Ramanujadasan
ஆக 01, 2024 14:17

வெகு விரைவில் உலக மக்கள் தொகை , தீவிரவாதிகள் எண்ணிக்கை , அங்கி லுங்கி சேட்டைகள் குறைய வாய்ப்பு இருக்கிறது


ponssasi
ஆக 01, 2024 14:09

மானுட உணவு சங்கிலியின் தொடர் தான் போர்.


RAMAKRISHNAN NATESAN
ஆக 01, 2024 13:52

இஸ்லாத்தை விட்டு வெளியேறுபவர்கள் இந்தியாவிலேயே அதிகமாகிவிட்டனர்.. அவர்களில் பலர் நாத்திகத்தை கைக்கொண்டனர்... இணையத்தில் விபரங்கள் உண்டு .......


Ramanujadasan
ஆக 01, 2024 14:15

அதாவது நெருப்பில் இருந்து நெருப்பு சட்டிக்கு மாறி விட்டனர் . அப்படித்தானே


Anand
ஆக 01, 2024 13:41

இதற்க்காகத்தான் இஸ்ரேல் மற்றும் அவிங்க நேச நாடுகள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்...


N.Purushothaman
ஆக 01, 2024 13:32

ஏற்கனவே பொருளாதார தடையால் அவதிப்பட்டு கொண்டு இருக்கும் ஈரான் இஸ்ரேலுடன் நேரடியாக மோதும் என நம்ப தோன்றவில்லை .....ஈரான் மற்றும் ஈராக் நாடுகள் கிட்டத்தட்ட இருப்பது ஆண்டுகளுக்கும் மேலாக போரிட்டு கொண்டு இருந்த நாடுகள் ....ஏராளமான உயிரிழப்புக்கள் சொத்துக்களை உடமைகளை போரால் இழந்த நாடுகள் .....


Vijayakumar Srinivasan
ஆக 02, 2024 00:47

உண்மை தான் சார்.இன்னும்மோசமானநிலைமைக்குஈரான்சென்றுவிடும்அது.அருகில்உள்ளநாடுகள்அனைத்தும்துன்பபடும்.அவர்களுக்குள்ஒற்றுமைஇல்லை


பேசும் தமிழன்
ஆக 01, 2024 13:05

ஈரான் தொடங்கி வைத்தால்.... இஸ்ரேல் தாக்குதல் மூலம்.... ஈரான் பெண்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்..... அவர்களும் எல்லோரையும் போல விரும்பிய ஆடைகளை அணிந்து கொண்டு சுதந்திரமாக இருப்பார்கள்..... எல்லாம் நன்மைக்கே.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி