இலங்கை பார்லிமென்ட்டை கலைத்தார் அதிபர் அனுர குமார திசநாயகே
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கை பார்லிமென்ட்டை கலைத்து இன்று (செப்.24) உத்தரவிட்டார் அதிபர் அனுர குமார திசநாயகே .நம் அண்டை நாடான இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரா குமார திசநாயகே, வெற்றி பெற்றார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ilk9rrgs&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் மூத்த தலைவர் தினேஷ் குணவர்தன, பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த ஹரிணி அமரசூரிய, 54, பதவியேற்றார்.அவருக்கு அதிபர் அனுரா குமார திசநாயகே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.இந்நிலையில் இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசநாயகே உத்தரவிட்டார். முன்னதாக தேர்தலில் கொடுத்த வக்குறுதியின் படி 11 மாதங்களுக்கு முன்பாகவே கலைக்கப்படுவதாகவும் புதிய தேர்தல் நவம்பர் 14-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவித்தார்.