உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தொழுகையின் போது பாட்டு போடாதீங்க: துர்கா பூஜைக்கு வங்கதேசத்தில் கட்டுப்பாடு

தொழுகையின் போது பாட்டு போடாதீங்க: துர்கா பூஜைக்கு வங்கதேசத்தில் கட்டுப்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் தினசரி தொழுகையின் போது துர்கா பூஜை பந்தல்களில் இசைக்கருவி இசைப்பது, பாடல்கள் ஒலிக்கவிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, அந்நாட்டின் இடைக்கால அரசு கேட்டுக் கொண்டுள்ளது.நம் அண்டை நாடான வங்கதேசத்தில், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. சமீபத்தில் வங்கதேசத்தில் வெடித்த மாணவர் போராட்டத்தின் போது, இங்கு வசிக்கும் ஹிந்து உள்ளிட்ட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. வங்கதேசத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். துர்கா பூஜை பந்தல் அமைத்து, அங்கு பிரமாண்ட துர்க்கை சிலைகளை வைத்து மக்கள் வழிபடுவர்.

அறிவுறுத்தல்

கடந்த ஆண்டு 33,431 பந்தல்கள் நாடு முழுதும் அமைக்கப்பட்டன. கடந்த சில ஆண்டுகளாக, துர்கா பூஜை காலங்களில் ஹிந்துக்கள் மீது தாக்குதல் நடப்பது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு அக்., 9 - 13 வரையில் துர்கா பூஜை பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான பந்தல்கள் அமைக்கப்பட உள்ளதாக ஹிந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், துர்கா பூஜையின் போது ஹிந்துக்கள் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வங்கதேச அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி, மசூதிகளில் தொழுகைக்கான அழைப்பு விடுக்கப்படுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன் இருந்து, தொழுகை முடிவடையும் வரை, துர்கா பூஜை பந்தல்களில் வாத்தியங்கள் இசைப்பது, பாடல்கள் ஒலிக்கவிடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என, ஹிந்து அமைப்புகளுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்த கோரிக்கையை ஹிந்து அமைப்பினர் ஏற்றுக் கொண்டுள்ளதாக உள்துறை ஆலோசகர் முகமது ஜஹாங்கிர் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

நடவடிக்கை பாயும்

மேலும், துர்கா பூஜை பந்தல்களுக்கு உச்சபட்ச பாதுகாப்பை 24 மணி நேரமும் அரசு வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ''நாம் மத நல்லிணக்கத்தை பேணும் தேசம். துர்கா பூஜையின் போது மத நல்லிணக்கத்தை குலைக்கும் செயல்களை யாரும் செய்யக்கூடாது. அமைதியை குலைக்க முயல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்,'' என, வங்கதேச ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

subramanian
செப் 14, 2024 15:12

மசூதி கூம்பு ஸ்பீக்கர் ல நேரம் கெட்ட நேரத்தில் கூச்சல் போடாதீங்க....


Sudha
செப் 14, 2024 13:56

தமிழ் நாட்டில் masoodhigal அதிகமா சர்ச்கள் அதிகமா அனைத்தையும் என்ன செய்வாய்?


தமிழ்வேள்
செப் 14, 2024 13:31

மதம் மாற்றியை பேரறிஞன் என்று ஒப்புக்கொண்ட மதிகெட்ட மாக்கள் உள்ள மாநிலம் இது .....விளங்காமல் நாசமாக போகும் ...


Bahurudeen Ali Ahamed
செப் 14, 2024 12:57

இதில் என்ன தவறு என்று எனக்கு புலப்படவில்லை, இதற்கு மற்றோர் பெயர் சமய சமூக நல்லிணக்கம், அந்த அரசு இந்து சகோதரர்களிடம் கோரிக்கைதான் வைத்துள்ளார்கள், மேலும் துர்கா பூஜைக்கு எந்த இடையூறும் இருக்க கூடாது என்றும் கூறியிருக்கிறது இது சரியானதுதானே ?. யாருக்கும் எந்த இடையூறும் இல்லாமல் வழிபாடு செய்வதுதான் சரியானது. விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போவதில்லை, தொழுகை நேரம் அதிகபட்சம் 10 நிமிடம்தான். எங்கள் ஊரில்அறந்தாங்கி வீரகாளியம்மன் தேர் இரண்டாவதுநாள் பள்ளிவாசலை கடந்து செல்லும்போது தொழுகை நேரம் என்றால் மேள தாளம் இல்லாமல் அமைதியாக கடந்து செல்லும். அதேநேரம் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த பெரியவர்கள் பக்தர்களுக்கு குளிர்பானம் வழங்குவார்கள். இதில் அல்லவா இருக்கிறது புரிதல் மற்றும் சகோதரத்துவம். நாம் மற்றவர்களை புரிந்துகொண்டால் அவர்களும் நம்மளை புரிந்து கொள்வார்கள். சகோதரத்துவம் பெரிது.


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 15, 2024 19:35

தூக் ஜிஹாத் செய்யப்பட்ட பிறகுதானே குளிர் பானம் வழங்கப்படுகிறது ????


mei
செப் 14, 2024 12:26

நீ


M S RAGHUNATHAN
செப் 14, 2024 12:07

இந்த ஒரு நாட்டில் தான் ஹிந்துக்கள் தங்கள் உரிமைகளை பறிக்கப் படுவதை பார்த்துக் கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது. கூம்பு வடிவஒலிப் பெருக்கிகளை உச்ச நீதி மன்றம் தடை செய்தும், இங்கு அந்த தீர்ப்பை மசூதிகளில் நடைமுறைப் படுத்த முடியவில்லை. உச்ச நீதி மன்றத்தின்உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன தயக்கம். இல்லையென்றால் அரசுஹிந்துக்கள் இரண்டாம் தர குடிமகன்கள் தான். சிறுபான்மையினர் தான் முதல் தர குடிமக்கள் என்று சட்டம் போடட்டும்.


Sivam Sivam
செப் 14, 2024 11:52

ஆம் நண்பா அடுத்த மதத்தையும் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து நடத்தல் அவசியம்


ramesh
செப் 14, 2024 11:42

இது நடப்பது வங்கதேசத்தில் .இந்தியாவில் அல்ல .செய்தியை முழுவதும் படித்து விட்டு கருத்து போடுங்கள்


ஆரூர் ரங்
செப் 14, 2024 11:36

5 வேளையும் ஸ்பீக்கர் வைத்து சத்தம் எழுப்பி அழைக்க வேண்டியது நூலில் கூறப்பட்ட கடமையா? 7 ஆம் நூற்றாண்டில் ஒலிபெருக்கி கிடையாதே.


Bahurudeen Ali Ahamed
செப் 14, 2024 15:55

ஆமாம் சகோ ஐந்து வேளையும் தொழுகைக்கான அழைப்பான பாங்கு சொல்லவேண்டியது கடமைதான், அந்த பாங்கு அழைப்பு இரண்டு நிமிடத்திற்கு மேல் இருக்காது. மேலும் முந்தைய காலங்களில் மக்கள் மாட்டுவண்டியில் சென்றார்கள் என்பதற்காக இன்று ஏன் பேருந்துகளில் செல்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்


ஆரூர் ரங்
செப் 14, 2024 11:08

கோர்ட்டே விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த முஸ்லிம் பள்ளிவாசல் ஜமாஅத்தின் தடையில்லா சான்றிதழ் வாங்கிவரச் சொன்னால் சொந்த நாட்டிலேயே இரண்டாந்தர குடிமக்கள்தானே?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை