உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்; விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!

இந்தியாவின் ஜிசாட் 20 செயற்கைக்கோள்; விண்ணில் ஏவியது ஸ்பேஸ் எக்ஸ்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: இஸ்ரோ தயாரித்த 4,700 கிலோ எடை கொண்ட ஜிசாட் 20 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்காக, ஜிசாட் 20 செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. இந்த செயற்கைக்கோள் எடை 4,700 கிலோ. இதனை இஸ்ரோவுக்கு சொந்தமான ராக்கெட்டுகளால் விண்ணில் செலுத்துவது கடினமானது. இதனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியை இஸ்ரோ நாடியது. அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒத்துகொண்டது.இந்நிலையில், இன்று (நவ.,19) அமெரிக்காவின் ப்ளோரிடாவில், கேப் கேனரவல் ஏவுதளத்தில் இருந்து, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட், மூலம் ஜிசாட் 20 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. * இதில் உள்ள தகவல் தொடர்பு பேலோட் 14 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது.* செயற்கைக்கோள் செயல்பாட்டிற்கு வந்ததும் தொலைதூரப் பகுதிகளுக்கான இணைய இணைப்பை வழங்கும். * இந்த செயற்கைக்கோளில் 32 பீம்கள் இணைக்கப்பட்டுள்ளது. * இதன் மூலம் இந்தியாவின் வடகிழக்கு பிராந்தியங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் அதிவேக இணைய சேவையை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Loganathan Kuttuva
நவ 19, 2024 16:02

நல்ல முன்னேற்றம்


S. Venugopal
நவ 19, 2024 10:07

கடந்த ஏறக்குறைய 10 ஆண்டுகள் காலகட்டத்தில் விண்ணில் செலுத்திய 8 செயற்கைகோள்கள் தற்பொழுது ஏவப்பப்ட்ட செயற்கைகோளும் தகவல் தொடர்பு செயல்களுக்ககாவே என்று தெரிகிறது. அந்த 8 செயற்கைகோள்களின் செயல்பாடும் தற்பொழுது ஏவப்பப்ட்ட செயற்கைக்கோளும் நமது நாட்டின் தகவல் தொடர்பு மிகவும் தலை சிறந்த நிலையில் இருக்கும். நமது மத்திய அரசையும் விண்வெளித்துறையும் இந்த செயலுக்கு பாராட்டப் படவேணடும். அதேநேரத்தில் நமது விஞ்ஞானிகள் செயற்கை கோள்களுக்கு தேவையான அட்டாமிக் கிளாக்கை நமது நாட்டில் தயாரிக்க கடும் முயற்சியினை எடுத்தால் இன்னும் நமது நாட்டிற்கு நன்மை பயக்கும்.


Krishna R
நவ 19, 2024 09:01

எவ்வளவு செலவு ஆனது?