உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பயங்கரவாதி ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதியும் ஒன்று தான்: பெண்டகன் முன்னாள் அதிகாரி

பயங்கரவாதி ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதியும் ஒன்று தான்: பெண்டகன் முன்னாள் அதிகாரி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லாடனும், பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீரும் ஒன்று தான் என பெண்டகன் முன்னள் அதிகாரி மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.பெண்டகன் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ஒசாமா பின்லாடன் மற்றும் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் இடையே ஒரே வித்தியாசம் மட்டுமே உள்ளது. ஒசாமா பின்லாடன் குகையில் வாழ்ந்தார். அசிம் முனீர், மாளிகையில் வசிக்கிறார். அதனைதாண்டி இருவரும் ஒரே மாதிரியானவர்கள். அவர்களின் முடிவும் ஒரே மாதிரி இருக்கும்.பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க ஒரே வழி, பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கும் நாடாகவும், அசிம் முனீரை பயங்கரவாதியாக அறிவிக்க வேண்டும்.பஹல்காம் தாக்குதலை ஏதேச்சையானது என பாசாங்கு செய்யக்கூடாது. அது பன்றிக்கு உதட்டுச்சாயம் போட்டது போன்று ஏற்றுக்கொள்ள முடியாத சமாளிப்பு ஆகும். தாக்குதல் நடத்தப்பட்ட காலகட்டத்தை கவனிக்க வேண்டும். பில் கிளிண்டன் இந்தியா சென்ற போது பயங்கரவாத தாக்குதல் நடந்தது. அதேபோல் துணை அதிபர் ஜேடி வான்சின் இந்திய பயணத்தில் இருந்து கவனத்தை திசை திருப்ப பாகிஸ்தான் விரும்புவது தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

sasikumaren
ஏப் 25, 2025 22:35

நிதியுதவி ஆயுதங்கள் நவீன விமானங்களை கொடுக்கும் போது இந்த அமெரிக்க அறிவு வேலை செய்யவில்லையா எல்லாம் இந்தியாவை ஏமாற்ற நினைக்கும் சதிகள் அன்று அமெரிக்க இன்று சைனா சிறிது காலம் போகட்டும் சைனாவும் பக்கிகளின் கை தட்டி விட்டு போய் கொண்டே இருக்கும்


Karthik
ஏப் 25, 2025 10:07

மறுக்க முடியாத உண்மை. எதார்த்தம் அதுதான்.


PRS
ஏப் 25, 2025 04:24

இதை விட வேற என்ன உவமை வேண்டும்? இரண்டு பேரும் தீவிரவாதிங்கதான்.


xyzabc
ஏப் 25, 2025 03:52

முனீர் ஒரு தீவிரவாதி


Kasimani Baskaran
ஏப் 25, 2025 03:48

அன்று பங்களாதேஷ்க்காக பல்லாயிரம் வீரர்களை இழந்த இந்தியா 93000 பாக்கிஸ்தான் ராணுவத்தினரை விடுதலை செய்தது தவறு. இன்று மோடியும் அதே தவறை செய்யக்கூடாது.. அவர்களது இராணுவத்தை பாதியாக குறைக்க வேண்டும்.


மீனவ நண்பன்
ஏப் 25, 2025 03:10

பாஜ்வா ஐநா அமைதிப்படையில இந்திய படை வீரர்களுடன் காங்கோவில் பணிபுரிந்தபோது நல்ல நட்புடன் பழகினார் அவர் காலத்தில் எல்லையில் அமைதி நிலவியது இம்ரான் அவரை எதிர்த்து அரசியல் செய்தார்


thehindu
ஏப் 25, 2025 00:22

நெத்தியடி வாங்கியவர்கள் 20 ஆண்டுகள் ஆகியும் மறக்காமல் இருக்கிறார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை