உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டிரம்ப் உடன் நேருக்கு நேர் விவாதம்: சொதப்பியது குறித்து மவுனம் கலைத்த ஜோ பைடன்

டிரம்ப் உடன் நேருக்கு நேர் விவாதம்: சொதப்பியது குறித்து மவுனம் கலைத்த ஜோ பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: சி.என்.என்., தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்றனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சொதப்பியது விமர்சனத்தை ஏற்படுத்தியது. விவாத மேடையில் கிட்டத்தட்ட நான் தூங்கிவிட்டேன் என ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர். இந்நிலையில், பைடன் மற்றும் டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சி நடந்தது. இருவரும் வரம்புமீறி, தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபட்டனர். ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜோ பைடன் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் திணறினார்.

நான் தூங்கிவிட்டேன்...!

விவாதத்தில், சொதப்பியது குறித்து ஜோ பைடன் கூறியதாவது: இது நான் கூறும் சாக்கு அல்ல. இது எனது விளக்கம். விவாதத்தில் நான் ஸ்மார்ட்டாக செயல்பட வில்லை. அதற்கு முதல் நாள் இரவு எனக்கு சரியான தூக்கம் இல்லை. நான் எனது ஊழியர்கள் சொன்னதை கேட்கவில்லை. விவாத மேடையில் கிட்டத்தட்ட நான் தூங்கிவிட்டேன். இவ்வாறு பைடன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Amruta Putran
ஜூலை 03, 2024 23:15

US Pappu? Or US Dhadhi?


சுலைமான்
ஜூலை 03, 2024 22:00

இதுக்கு பேருதான்யா கருணாநிதித் தனம்.... சபாஷ்


Lion Drsekar
ஜூலை 03, 2024 14:57

தேவகௌடா தேவகௌடா .. வந்தே மாதரம்


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 03, 2024 14:49

தல .... நீங்க அமெரிக்க ஜனாதிபதி ..... நீங்க தும்முனா, இருமினாக்கூட பதினஞ்சு மருத்துவர்கள் பதறியடிச்சுக்கிட்டு ஓடி வருவாங்க ..... தூங்கலைன்னாலும் உங்களை அமைதியா தூங்க வைக்கவும் எவ்ளோவோ ஏற்பாடுகள் இருக்கும் .... இப்படி பச்ச பொய்யி அடிச்சு உடுறீங்களே .....


Thanga Durai
ஜூலை 03, 2024 14:06

முதல் நாள் இரவு எனக்கு சரியான தூக்கம் இல்லை என்று அமெரிக்க அதிபர் நேர் விவாதத்தில் சொதப்பியதற்கு காரணமாக சொன்னது செம காமெடி ..


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி