உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆப்கானிஸ்தானில் மாஜி விண்வெளி வீரர் நீல் ஆம்‌ஸ்ட்ராங்

ஆப்கானிஸ்தானில் மாஜி விண்வெளி வீரர் நீல் ஆம்‌ஸ்ட்ராங்

காபூல்: நிலவில் முதன்முதலாக காலடி வைத்த மாஜி விண்வெளி வீரர் நீல்ஆம்ஸ்ட்ராங்க், ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அமெரிக்க போர்வீரர்களை சந்தித்துபேசினார். கடந்த 1970-ம் ஆண்டு விண்வெளியில் அப்போலோ விண்கலம் மூலம் முதன்முதலாக நிலவில் காலடி வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ராங் (82). இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் வந்திருந்த நீல்ஆம்ஸ்ட்ராங், தலைநகர் காபூலிலிருந்து போர் விமானம் மூலம் ஈகர் ராணுவ பயிற்சி முகாமிற்கு வருகை தந்தார். அங்கு பயிற்சி பெற்றுவரும் அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ,நேட்டோபடைகள் எதிர்கொண்டு வருகின்றன. நேட்டோ படைப்பிரிவில் சேருவதற்கான பயிற்சியில் நீங்கள் ஈடுபட்டு கொண்டிருப்பதை காணமுடிகிறது. கடந்த சில மாதங்களாக நேட்டோப்படைகளில் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் 2014-ம் ஆண்டிற்குள் ஆப்கானில் போர் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறேன்என்றார். விண்வெளி வீரர் ஒருவர் ஆப்கானிஸ்தானில் முகாமி்ட்டு அமெரிக்க ராணுவ வீரர்களை சந்தித்து பேசியது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது. முன்னதாக காபூலில் அமெரிக்க ராணுவ உயரதிகாரி ஒருவர் நீல் ஆம்ஸ்ட்ராங்கை வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ