உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சிலியில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

சிலியில் காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சான்டியாகோ: சிலி நாட்டில் பற்றி எரியும் காட்டுத் தீயில் சிக்கி, இதுவரை 112 பேர் பரிதாபமாக பலியாகினர். 1,100க்கும் அதிகமான வீடுகள் எரிந்து சேதமடைந்தன.தென் அமெரிக்க நாடான சிலியின் வல்பரைசோ மாகாணத்தில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ பரவத்துவங்கியது. இங்கு அதிக வெப்பநிலை மற்றும் குறைந்த ஈரப்பதம் நிலவுவதுடன், பலத்த காற்றும் வீசுவதால் தீயை அணைப்பது சவாலாக உள்ளது. தீயணைப்பு படையினர், 19 ஹெலிகாப்டர்களில் சென்று போராடி தீயை அணைத்து வருகின்றனர். காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 112 பேர் கருகி பலியாகியுள்ளனர்.இவர்கள் அனைவரும் வனப் பகுதிக்கு அருகில் வசித்து வந்தவர்கள். காட்டுத்தீ பரவுவதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். எனினும் 1,100 வீடுகள் எரிந்து சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை