உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புத்தாண்டில் ஜெர்மனி ,பிரான்ஸ் அதிபர்கள் இந்தியா வருகை

புத்தாண்டில் ஜெர்மனி ,பிரான்ஸ் அதிபர்கள் இந்தியா வருகை

புதுடில்லி : இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் வரும் புத்தாண்டில் ஜெர்மனி, பிரான்ஸ் அதிபர்கள் இந்தியாவிற்கு வருகைதர உள்ளனர்.இது குறித்து கூறப்படுவதாவது: ஜெர்மனி ஐரோப்பிய யூனியனி்ல் வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடாகவும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாகவும் நாடாக விளங்கி வருகிறது. தொடர்ந்து இந்தியா ஐரோப்பா உடன் பெரிய அளவிலான உறவு மேம்பாட்டை துவங்க உள்ளது. இதன் துவக்கமாக வரும் புத்தாண்டில் ஜனவரி மாதத்தில் நாட்டில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியா கோஸ்டா கலந்து கொள்ள உள்ளனர். மறுநாள் 27-ம்தேதி புதுடில்லியில் நடைபெற உள்ள இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டிலும் பங்கேற்க உள்ளனர். இவர்களை தொடர்ந்து ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் ஜனவரியில் இந்தியாவுக்கு வருகை தர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பி்ப்.,-ல் இந்தியா நடத்த உள்ள செயற்கைநுண்ணறிவு ( ஏஐ டெக்னாலஜி) மாநாட்டிலும் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வருகை தர உள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை