| ADDED : பிப் 15, 2024 05:17 PM
வாஷிங்டன்: கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை ஒரே நேரத்தில் 20 மொபைல் போன்களை பயன்படுத்தி வருகிறார். இது அவர் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: ஒரே நேரத்தில் 20 மொபைல்போன்களை பயன்படுத்தி வருகிறேன். இதற்கு கூகுள் தயாரிப்புகள் வெவ்வேறு மொபைல் போன்களில் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்யும் எனது பணியின் ஒரு அங்கமாக அவ்வாறு செய்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிய மொபைல் போனை மாற்றி முயற்சித்து வருகிறேன் என்றார்.அவரின் குழந்தைகள் யூடியூப் பயன்பாடு குறித்த கேள்விக்கு சுந்தர்பிச்சை அளித்த பதிலில், தொழில்நுட்ப கல்வியறிவு மற்றும் பொறுப்பான பயன்பாடு ஆகிய இரண்டும் மிகவும் முக்கியம் என்றார்.கடவுச்சொல்
தனது கணக்குகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன் என்பது குறித்து விளக்கமளித்த சுந்தர்பிச்சை, தான் அடிக்கடி கடவுச்சொற்களை மாற்றுவது கிடையாது. கூடுதல் பாதுகாப்புக்காக ‛ டூ பேக்டர் ஆத்தன்டிகேசன்‛( two-factor authentication) ஐ நம்பி உள்ளேன் என்றார்.